கொரோனா தடுப்பு பணி உயிரிழப்புகளுக்கு தியாகிக்கான அரசு மரியாதை - ஒடிஷா முதல்வர் அதிரடி அறிவிப்பு!
கொரோனா தடுப்பு பணி உயிரிழப்புகளுக்கு தியாகிக்கான அரசு மரியாதை - ஒடிஷா முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணியின் போது தன்னுயிரை ஈந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் சில சமூகவிரோதிகள் வன்முறை வெறியாட்டத்தை உருவாக்கி சிறை சென்று கம்பி என்னும் நிலை உருவாகி விட்டது.
கொரோனா தடுப்பு பணி செய்து வரும் செவிலியர்கள் மருத்தவர்களை பாதுகாக்கும் விதமாகவும் உயிர் துறக்கும் மருத்துவர்களுக்கு மரியாதை செய்யும் விதமான அறிவிப்பை ஒடிஷா அரசு அறிவித்து கௌரவித்துள்ளது குறிபிடத்தக்கது.
கொரோனா தடுப்பு பணியின் போது உயிர் இழக்கும் மருத்துவர் செவிலியர்களுக்கு தியாகிக்கான அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்ய படும் என ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஒடிஷா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நலப்பணிகள் செய்யும் மருத்துவர்கள் உயிர் இழந்தால் அவர்களின் குடும்ப நல நிதியாக ₹50 லட்சம் நிதி வழங்கப்படும், உயிர் இழக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யபடும். மேலும், அரசின் சார்பில் தியாகியாக அறிவிக்க படுவர் என ஓடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அதிரடியாக அறிவித்துள்ளார். இது மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.