ஒருபக்கம் கட்டுப்பாடுகளை இறுக்குகிறார், இன்னொருபக்கம் தட்டுப்பாடுகளை அகற்றுகிறார் - பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் மனம் திறந்து பாராட்டு.!
ஒருபக்கம் கட்டுப்பாடுகளை இறுக்குகிறார், இன்னொருபக்கம் தட்டுப்பாடுகளை அகற்றுகிறார் - பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் மனம் திறந்து பாராட்டு.!

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டி பல நாட்டு பத்திரிக்கைகளும், சுகாதாரம் தொடர்பான உலகளாவிய ஆய்வு இதழ்களும் பாராட்டியுள்ளன. குறிப்பாக பிரதமர் மோடி உலக தலைவர்கள் இடையே நடைபெற்ற ஒப்பீட்டு ஆய்வில் 68 புள்ளிகள் பெற்றுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில்,
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
''கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீங்களும், உங்களது அரசும் செய்து வரும் சரியான கண்டிப்பான நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். ஒருபுறம் பொது சுகாதாரத்தை பேணி கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இன்னொரு புறம் பொருளாதார ரீதியாக சமூகத்தில் பின் தங்கியுள்ளவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது.
ஊரடங்கை அமல்படுத்தியது, பரிசோதனையை விரிவுபடுத்தியது, தனிமைப்படுத்துவதற்காக ஹாட்ஸ் பாட் பகுதிகளை கண்டறிந்தது, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரோக்கிய சேது செயலி உள்பட தற்போதைய லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை இந்தியா சிறப்பாக செயல்படுத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.