கொரோனா தடுப்பு பணி தமிழகத்தில் சிறப்பாக உள்ளது - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு.!
கொரோனா தடுப்பு பணி தமிழகத்தில் சிறப்பாக உள்ளது - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு.!

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நேற்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
தமிழகத்தில் செய்யபட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார் மேலும் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு உருதுதுனையாக இருக்கும் தமிழகம் கேட்கும் அணைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக செய்துள்ளது திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார் மேலும் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்யுமாறும் கேட்டுகொண்டார்.
தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாக தமிழக அரசின் செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.