இந்தியாவில் கிரிக்கெட் நடத்த நீண்ட நாள் எற்படும் - பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.!
இந்தியாவில் கிரிக்கெட் நடத்த நீண்ட நாள் எற்படும் - பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.
இதனால் இந்தியாவில் நடக்கவிருந்த கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டனர். இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் ஐ.பி.எல் போட்டி நடைபெறும் இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டி கொரோனாவின் காரணத்தால் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் எப்போது கட்டுக்குள் வரும் என தெரியவில்லை. ஆனால், ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் மக்களுக்கு ஆபத்தானது. இதனால் கிரிக்கெட் போட்டி நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி அவர் கூறியது: சீக்கிரமாக இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது சாத்தியம் இல்லை. அப்படி நடத்தினால் அது மக்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். மேலும் கிரிக்கெட் போட்டி நடத்துவது பற்றி நான் இதுவரை யோசிக்க வில்லை என்றார்.