Kathir News
Begin typing your search above and press return to search.

தப்ளிக் மாநாட்டிலிருந்து தப்பித்த உ.பி. முகாம்களை சேர்ந்த ரோஹிங்கியோக்கள் மாயம் - தொற்று பயத்தால் தொடர்ந்து தேடி வரும் போலீசார்.!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 April 2020 10:18 AM IST

கரோனா வைரஸ் தோற்று கடுமையாக பரவியதால் கடந்த மார்ச் 31-ல் டெல்லி தப்லீக்-எ-ஜமாத்தின் தலைமையகம் காலி செய்யப்பட்டது. இங்கு தங்கி யிருந்த தமிழகம் உள்ளிட்ட பெரும் பாலான மாநிலத்தவரும், வெளி நாட்டவர்களும் வெளியேற்றப்பட்டனர். ஜமாத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட வெளி நாட்டவர்களின் மூலம் பலருக்கு கரோனா தொற்று பரவியது மருத்துவ பரிசோதனை மூலம் தெரிய வந்தது.

இந்நிலையில் தப்லீக்ஜமாத் மாநாட்டில் அதிக அளவில் ரோஹிங்கியா முஸ்லிம்களும் கலந்து கொண்டிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. மியான்மரை சேர்ந்த இவர்கள் அகதிகளாக டெல்லி, ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்கியிருந்தவர்கள் என தெரிகிறது.

இவர்கள் அனைவரும் தப்லீக் கின் கூட்டம் முடித்து தலைமை யகத்தில் இருந்து கிளம்பி விட்டனர். எனினும் அவர்கள் அகதிகள் முகாம்களுக்கு இது வரை திரும்பவில்லை. எனவே, அவர்களை தற்போது டெல்லி போலீஸார் தேடி வருகின்றனர். இவர்களில் எவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் அது மேலும் பலருக்கு பரவ வாய்ப்புகள் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் செல்போன் வைத்திருப்பதில்லை என்றும், முகாம்களில் இவர்களில் டெல்லி சென்றவர்கள் குறித்த குறிப்புகள் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News