உறுதியானது மிஸ்கின் - சிம்பு கூட்டணி.!
உறுதியானது மிஸ்கின் - சிம்பு கூட்டணி.!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தில் நடிக்க சிம்புவை அணுகி வந்தனர்.
துப்பறிவாளன் 2 படத்திலிருந்து வெளியேறிய இயக்குநர் மிஸ்கின் கடந்த சில மாதங்களுக்கு முன் சிம்புவை சந்தித்ததாகத் தகவல் வெளியானது.
இருவரும் கடந்த சில வருடங்களாகவே இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசி வந்த நிலையில், இந்த சந்திப்பு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் சிம்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் அடுத்து ஓர் படத்தினை இயக்கவுள்ளார் மிஸ்கின். அதனைத் தொடர்ந்து இப்படத்தினை இயக்குவார் எனத் தெரிகிறது.