உலக நாடுகள் எல்லாம் குண்டுகளை புதைத்துவிட வேண்டும், மனிதநேயங்கள் ஒன்று சேரனும் - வடிவேலு பேச்சு!
உலக நாடுகள் எல்லாம் குண்டுகளை புதைத்துவிட வேண்டும், மனிதநேயங்கள் ஒன்று சேரனும் - வடிவேலு பேச்சு!

ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு அவ்வப்போது வீடியோ மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் மனிதநேயங்கள் ஒன்று சேரனும் மருத்துவ உலகம் தலையோங்கி நிக்கணும் என்று கூறி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது.
உண்மையில் இப்பொழுது போர் தான் நடந்து கொண்டிருக்கிறது. உயிர்களெல்லாம் சாகவேண்டும் கட்டிடம், வீடு, வாசல், கார் போன்ற எல்லாம் இருக்கணும் என்று யாரோ ஏதோ பண்ணிவிட்டார்கள், இதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்! உலக நாடுகள் எல்லாம் குண்டுகள் எல்லாம் புதைத்துவிட வேண்டும், அதெல்லாம் தேவையில்லை, மனித நேயங்கள் ஒன்று சேரவேண்டும், மருத்துவ உலகம் தலை தூக்க நிக்கணும், மருத்துவ உலகமே திணறுகிறது, இப்பொழுது அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டால் போதும், மருத்துவர்கள்! கடவுள்கள்! என்று கூறி உள்ளார்
மேலும் தான் நடித்த வின்னர் படத்தில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சியில் இடம் பெற்ற கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் என்ற வசனத்தை குறிப்பிட்டு இப்போது கோடு தாண்டி வரக்கூடாது, ரோடு தாண்டி வரக்கூடாது, வீடு தாண்டி வரக்கூடாது என்கிறார்கள். என்ன ஒரு சேட்டை. கேட்க மாட்டேங்குதுங்க இந்த பயபுள்ளைக. இந்த நேரத்தில் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் பாடம் காலங்காலத்திற்கும் அவர் மனதில் நிற்கும் என்று குறிப்பிட்ட அவர்,
பிள்ளைகளை வளர்க்க நல்ல ஒரு சந்தர்ப்பம், யாருக்கும் கை கொடுக்கக்கூடாது, முத்தம் கொடுக்கக்கூடாது என்று சொல்லணும். கைகளை சுத்தமாக கழுவ சொல்லிக் கொடுங்கள். பிற்காலத்திற்கு அவர்கள் டாக்டர்களாக வந்தாலும் சரி, பெரிய அதிகாரியாக வந்தாலும் சரி, நாட்டையே ஆள்பவராக இருந்தாலும் சரி குழந்தைகளுக்கு ஒரு பாடம் தானே. இந்தப் பாடத்தை குழந்தைகளுக்கு நாம் நடத்தி விட்டோம் என்றால் இதைவிட உலகத்தில் என்ன வேண்டும். சரியான சந்தர்ப்பத்தை கடவுள் கொடுத்திருக்கிறார். இதை வைத்து குழந்தைகளை நல்லப்படியாக வளர்த்துவிட வேண்டும் என பேசி உள்ளார்.