சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு உத்தரவு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!
சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு உத்தரவு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களுக்கு 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவும், மற்றும் சேலம், திருப்பூரில் ஆகிய இடங்களுக்கு 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுவதாகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தீவிர கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றறை கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
.