முதலமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லை - சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்.!
முதலமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லை - சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்.!

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மேலும் கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நாள்தோறும் பொதுமக்களை சந்தித்தும் வரும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் சுகாதாரத்துறை சார்பில் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் RT-PCR முறையில் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள் உட்பட 21பேருக்கு நேற்று பரிசோதனை செய்யப்பட்டது.இதன் முடிவுகள் இன்று வெளியான நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் , சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு செயலர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதாகவும் இதேபோல் பொதுமக்கள் 35பேருக்கு எடுத்த பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளதால் புதுச்சேரி மாநிலத்தில் சமூக தொற்று இல்லை என தெரிகிறது என்றார்.
மேலும் மத்திய அரசு அனுப்பிய 4ஆயிரம் ரேபிட் பரிசோதனை கருவியில் இருந்து 200கருவிகளின் தரம் குறித்து பரிசோதனை செய்ய அனுப்பட்டுதாவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கடந்த 9ஆம் தேதி கடைசியா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை யாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி அருகே உள்ள தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் ஆகியை பகுதிகளில் அதிக அளவில் கொரோனா தொற்று உள்ள நிலையில் நேற்று மட்டும் அப்பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட வாகனங்கள் புதுச்சேரிக்குள் உள்ளதாகவும் இதனால் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவுவதகான வாய்ப்பு உள்ளதால்
முதலமைச்சர் நாராயணசாமியிடம் எல்லைகளில் தீவிரமாக கன்காணிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய பிரதேசத்தில் இருந்து கோரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகளின் அறிந்து கொள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.