இத்தாலியில் வரும் செப்டம்பர் வரை பள்ளிகள் இயங்காது - பிரதமர் கியூ செப் கோன்டே அறிவிப்பு.!
இத்தாலியில் வரும் செப்டம்பர் வரை பள்ளிகள் இயங்காது - பிரதமர் கியூ செப் கோன்டே அறிவிப்பு.!

கொரோனா தொற்றால் முதன் முதலில் கடுமையாக பாதிக்கபட்ட நாடு இத்தாலி இங்கு கொரோனா தொற்றின் காரணமாக 26,000 மக்கள் தங்களின் இன்னுயிரை இழந்தனர். தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் தொழில் முடங்கி வேலை வாய்ப்புகள் இன்றி பொதுமக்கள் அவதியுற்று வீட்டில் முடங்கி யுள்ளனர். இத்தாலி பிரதமர் கியூ செப் கோன்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது நோய் பரவலை முற்றிலும் தடுக்க நாடு போராடி வருகிறது.
ஊரடங்கு மூலம் மக்கள் வீடுகளில் அடங்கியுள்ளனர். தொழில்கள் அனைத்தும் முடங்கி பொருளாதாரம்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழில் நிறுவனங்களை வரும் மே மாதம் 4 க்கு பின்னர் தொடங்கபடும், அதே போன்று சில கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்து தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
பள்ளி கல்லூரிகளை வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் திறக்க நடவடிக்கை எடுக்க படும் அதே நேரம் முழுமையாக திறக்கமுடியாது.
மார்ச் 9 தேதி முதல் இத்தாலி மக்கள் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் வரும் மே மாதம் 4 தேதிக்கு பிறகு ஒரளவு ஊரடங்கு தளர்த்தபடும் என இத்தாலிமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நோய் தாக்கம் குறைவான பகுதியில் மட்டும் மக்களுக்கு இயல்பான சூழல் உருவாகும் என்கிறது இத்தாலி அரசு.