தமிழகத்தில் எப்பொழுது பிளாஸ்மா சிகிச்சை? - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
தமிழகத்தில் எப்பொழுது பிளாஸ்மா சிகிச்சை? - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார், பின்னர் மிரட்டநிலை என்ற இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் "பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கான அனுமதி ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கான உத்தரவை பெறுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் மூலம் வலியுறுத்தி இருப்பதாகவும், மேலும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தொடர்ந்து அனுமதி கேட்டு கொண்டிருப்பதாகவும், மத்திய சுகாதார அமைச்சகம் தமிழகத்துக்கு வெகு விரைவில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு வாரத்தில் கிடைக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கு உண்டான உபகரணங்கள், ரத்த வங்கி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறினார்.