கொரோனா தொற்றை மறைத்த விவகாரம் - அமெரிக்காவில் சீன எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் துவக்கம்.!
கொரோனா தொற்றை மறைத்த விவகாரம் - அமெரிக்காவில் சீன எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் துவக்கம்.!

கொரோனா தொற்று பரவ காரணம் சீனா என குற்றம் சாட்டி அமெரிக்க வாழ் இந்திய வம்சாவழி பெண் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் நடத்தி சீனாவை திக்கு முக்காட செய்துள்ளார்
அமெரிக்க நாடாளுமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சீனா மீது விசாரணை செய்யவேண்டும் என்பதே இந்த கையெழுத்து இயக்கத்தின் நோக்கமாக இருக்கிறது
கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வரும் சீனாவை கொரோனா பரவலுக்கு பொறுபேற்க வைக்க்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கம்யூனிஸ்ட் சீனாவை தடுத்து நிறுத்துங்கள் என்ற வாசகம் முக்கியமாக பார்க்கபடுகிறது
அமெரிக்காவிலும் உலக நாடுகள் மீதுதனது வல்லாதிக்கத்தை செலுத்த சீனா முயற்சித்து வருகிறது அந்த முயற்ச்சியை அமெரிக்க நாடாளுமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும்
சீனாவின் மோசடியையும் அவர்களின் இயலாமை தடுத்து நிறுத்த எங்கள் கோரிக்கை மனுவில் அமெரிக்க மக்கள் கையெழுத்து இடுங்கள் எனகூறியதை ஏற்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் கையொப்பம் இட்டுவருகின்றனர்
ஐ.நா.பாதுகாப்பு குழு கூட்டத்தை கூட்டி கொரோனா வைரஸ் பரவ காரணமான சீனா மீது எடுக்கபடவேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என அந்த மனுவில் நிக்கி ஹாலி கூறியுள்ளார்
சீனாவை எதிர்க்கும் தைவானை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் மருந்துகள் கருவிகளை பெற உலகநாடுகள் சீனாவை சார்ந்து இருக்கும் நிலையை மாற்ற அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் சீனாவின் நிதி பங்களிப்பு உள்ள கல்வி நிறுவனங்கள் சீன நிதி சம்பந்தமான தகவல்களை வெளிபடுத்த வேண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தி உள்ளார்
நிக்கி ஹாலி தெற்கு கரோலின மாகாண ஆளுநராகவும்,ஐ.நா. மன்றத்தின் அமெரிக்க பிரிதிநிதியாகவும் செயல்பட்டவர் என்பதால் சீன எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.