Kathir News
Begin typing your search above and press return to search.

ஊரடங்கில் விவசாய விளைபொருட்கள் போக்குவரத்திற்காக மத்திய அரசின் புதிய செயலி - புதுமையான முயற்சி.!

ஊரடங்கில் விவசாய விளைபொருட்கள் போக்குவரத்திற்காக மத்திய அரசின் புதிய செயலி - புதுமையான முயற்சி.!

ஊரடங்கில் விவசாய விளைபொருட்கள் போக்குவரத்திற்காக மத்திய அரசின் புதிய செயலி - புதுமையான முயற்சி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 April 2020 10:36 AM IST

ஊரடங்கில் விவசாய விளைபொருட்கள் போக்குவரத்திற்காக மத்திய அரசு புதிய செயலியை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கில் விவசாய விளைபொருட்கள் தேக்கம் அடையாமல் போக்குவரத்து இடர்பாடுகள் இன்றி விற்பனை கூடங்களுக்கு கொண்டு செல்ல புதிய செயலியை மத்திய அரசின் விவசாய துறை அமைச்சகத்திற்காக National Informatics Centre (NIC) வடிவமைத்து உள்ளது. கிசான் ரத் (Kisan Rath) விவசாயிகளின் ரதம் என்ற பெயரில் கடந்த 17 ம் தேதி வெளியிடப்பட்டது.

வெளியிடபட்ட ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மக்கள் தங்கள் போக்குவரத்திற்காக தனியார் நிறுவனங்களான ஓலா, உபர் போன்று விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளான் பொருட்களை கொள்முதல் நிலையங்கள், குளிர்பதன கிடங்கு, விற்பனை கூடங்கள் என தேவை இடத்திற்கு கொண்டு செல்ல வாகனங்களை வாடகைக்கு அமர்த்த இந்த செயலி உதவுகிறது. இந்த சேவையை மத்திய அரசின் பொது சேவை மையங்களிலும் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


5 லட்சம் லாரிகள், 20 ஆயிரம் டிராக்டர்களை வாடகைக்கு அமர்த்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 24 ம் தேதி வரை 80474 விவசாயிகளும் 70581 வர்த்தகர்களும் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஊரடங்கில் மூடப்பட்ட 2587 விற்பனை சந்தைகளில் 1091 சந்தை மார்ச் 26 ம் தேதியிலும் 2067 சந்தைகள் ஏப்ரல் 23 ம் தேதியிலும் செயல்பாட்டிற்கு வந்தன.

கடந்த ஆண்டு கோடை காலத்தில் 25.22 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அரிசியும், 3.82 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பருப்பு வகைகளும், 5.47 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தானியங்களும் 6.80 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 34.73 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அரிசியும் 5.07 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பருப்பு வகைகளும் 8.55 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தானியங்களும் 8.73 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் எண்ணெய் வித்துக்களும் பயிரிடப்படடுவது அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் 98% ராஜஸ்தானில் 90% உத்திரப்பிரதேசத்தில் 82% ஹரியானாவில் 50% பஞ்சாப்பில் 45% மற்ற மாநிலங்களில் 86% கோதுமை அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 2.05 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 1605.43 ருபாய் மதிப்பிலான 1.79 லட்சம் டன் பருப்பு வகைகளும் 1.64 லட்சம் டன் எண்ணெய் வித்துக்களும் National Agriculture Cooperative Marketing Federation of India (NAFED) மற்றும் Food Corporation of India (FCI) மூலம் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் 2016ல் Electronic National Agriculture Market (eNam) என்ற பெயரில் விவசாய விளைபொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய ஏதுவாக இணைய தளம் மற்றும் செயலியை வெளியிட்டது. தற்போது நாடு முழுக்க 841Agricultral produce Market Committee (APMC) 13 இணைய விற்பனை சந்தையும் செயல்படுகிறது. தமிழகத்தில் 63 APMC கள் eNam திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் நாடு முழுக்க 585 eNam சந்தைகளும் 128015 பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களும் மாநில மூலம் 27956 ஒருங்கிணைந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 23 eNam சந்தைகளும் 2213 பதிவு செய்யப்பட்ட வர்த்தகர்களும் 98 ஒருங்கிணைந்த உரிமம் வழங்கப்பட்டு eNam திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இணைய வேளான் விளைபொருள் விற்பனை செயலி, இணைய விளைபொருள் வாடகை வாகன செயலி என விவசாய துறையில் டிஜிட்டல் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News