மோடி சரியான நேரத்தில் கொரோனா ஊரடங்கை அமல்படுத்தியாதல், கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது - வி.கே.பால்.!
மோடி சரியான நேரத்தில் கொரோனா ஊரடங்கை அமல்படுத்தியாதல், கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது - வி.கே.பால்.!

பிரதமர் நரேந்திர மோடி சரியான நேரத்தில் அறிவித்த ஊரடங்கு கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் தலைவர் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் செய்தியாளர்களிடம் கூறியதாவது தற்போது நாட்டில்கொரோனா வைரஸ் பரவுதல் கட்டுப்பாட்டில் உள்ளது.
கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவது மற்றும் வைரசை பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பெருமளவில் பயனளித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 21தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இருமடங்காக உயரத்தொடங்கியது பிரதமர் ஊரடங்கை அறிவித்ததும் இரட்டிப்பாக உயர்ந்து வந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது.
வெளிநாட்டு பயணிகளுக்கு தடை,சமூக விலகல், ஆகியவை நல்ல பலனை தந்தது இதற்கு இடையில் சில இடையூறுகளும் ஏற்பட்டன.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்நேரம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 ஒருலட்சத்தை தாண்டிஇருக்கும் என தெரிவித்தார்.