மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பும் ராமராஜன் - ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பும் ராமராஜன் - ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்.!

சாதாரண நடிகராகத் திரையுலகில் அடியெடுத்து வைத்து ஒரு காலத்தில் ரஜினிக்கு இணையான போட்டியாளராக கருதப்பட்ட நடிகர் ராமராஜன்.
எம்.ஜி.ஆரின் பரம விசிறியான ராமராஜன் அவரை போன்றே ஒப்பனை செய்து படங்களில் நடித்து வந்தார். 90களின் மத்தியில் அரசியல் களம் கண்டவர் மக்களவை பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றம் வரை சென்றார். கடைசியாக 2002ம் ஆண்டு 'மேதை' எனும் படத்தில் நடித்தவர் அதன் பின்னர் திரையுலகிலிருந்து விலகி இருந்தார். இவரை பல்வேறு கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர்கள் அணுகிய போதும், கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற நிலையில் நின்றார்.
இந்நிலையில் சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்குத் திரும்புகிறார் ராமராஜன். கிராமத்தை பின் புலமாகக் கொண்டு திரைக்கதை எழுதியுள்ள ராமராஜன், விஜய் சேதுபதியை அணுகி திரைக்கதையை விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி இன்னும் தனது முடிவைச் சொல்லாத நிலையில், நிச்சயம் அவர் நடிப்பார் என நம்பிக்கையில் இருக்கிறாராம் ராமராஜன். மேலும் பல திரைக்கதை எழுதியிருக்கும் ராமராஜன் கரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் இயக்குநராகக் களம் காணவிருக்கிறாராம்.