கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி - ஊரடங்கை தளர்த்திய நியூசிலாந்து!
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி - ஊரடங்கை தளர்த்திய நியூசிலாந்து!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் நியூசிலாந்திலும் பரவி உள்ளது.
இதனை பற்றி நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கூறியது: கொரோனாவால் நியூசிலாந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்று ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் பரவிய இடங்களை கண்டுபிடித்து அதை தடுத்து விட்டதாகவும். தற்போது கொரோனா இல்லாமல் இயல்பு நிலைக்கு அடைந்துவிட்டதாக நியூசிலாந்தின் சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர் ஆஷ்லே ப்ளூம்பீல்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என சொல்ல முடியாது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவிய இடங்களை கண்டுபிடிக்கப்பட்டு அதன் பரவுதலை தடுத்து விட்டோம் என்று தான் அர்த்தம். ஆகவே நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவை இன்று நள்ளிரவு முதல் தளர்வு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பத்திலேயே, எங்கள் நாட்டின் எல்லைகளை மூடினோம் மற்றும் முழு ஊரடங்கு உத்தரவை விதித்தோம். மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் எங்கள் நாட்டில் கொரோனாவை தடுத்துவிட்டதாக கூறிய நியூசிலாந்து பிரதமரை பல நாட்டு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.
Source: Dinamalar