இந்தியாவுக்கு அடுத்து வரும் மிகப்பெரிய புதிய ஆபத்து - எப்படி சமாளிப்பது, குழப்பத்தில் மக்கள்.!
இந்தியாவுக்கு அடுத்து வரும் மிகப்பெரிய புதிய ஆபத்து - எப்படி சமாளிப்பது, குழப்பத்தில் மக்கள்.!

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது.மேலும் ஊரடங்கு உத்தரவை நீடிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அடுத்து இரண்டு மாதங்களில் இந்தியாவில் இருக்கும் நிலங்களை அழிப்பதற்காக வெட்டுக்கிளிகளின் கூட்டம் வரப்போவதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த வெட்டுக்கிளிகள் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி பாலைவன வெட்டுக்கிளிகள் உடன் இணைந்து ஏமன், ஈரான், சவுதி அரேபியா, பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்து சேரும். பின்னர் இந்தியாவின் மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் உள்ள விளை நிலங்களை வெட்டுக்கிளி அழித்து பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதனால், இந்தியாவில் உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பு உண்டாகும். மேலும், ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும். தினதோறும் 35 ஆயிரம் பேருக்கு இருக்கும் உணவு தானியங்களுக்கு பாதிப்பை எற்படுத்தும் என ஐ.நா.வில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.