எளிய மக்களின் இல்லம் தேடி சென்று சிதம்பரம் தீட்சிதர்கள் பணத்துடன் பண்டங்கள் உதவி - குவியும் பாராட்டுக்கள்.!
எளிய மக்களின் இல்லம் தேடி சென்று சிதம்பரம் தீட்சிதர்கள் பணத்துடன் பண்டங்கள் உதவி - குவியும் பாராட்டுக்கள்.!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமலும், வருவாய் இழந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் நகருக்கு வெளியேயும் உள்ளேயும் நூற்றுக் கணக்கில் உள்ளனர்.
இவர்களின் தேவைகள் , பிரச்சனைகளை உணர்ந்த சிதம்பரம் நடராசர் கோவில் தீட்சிதர்கள் அரிசி, காய்கறி , அத்தியாவசிய மளிகை பொருள்களுடன் நேரில் சென்று அளித்ததுடன் அவர்களுக்கு உதவிப் பணமாக ரூ.100 ம் அளித்தனர். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பள்ளிப்படை பகுதியில் இந்த உதவியை செய்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
சென்ற வாரம், சமைக்கப்பட்ட உணவை வாகனத்தில் ஏற்றிச் சென்ற தீட்சிதர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கோவிந்தசாமி தெரு பகுதியில் வீடு வீடாகச் சென்று அன்னதானம் வழங்கினர். அப்பகுதி மக்களுக்கு உணவு, கபசுரக் குடிநீர் உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி வழங்கினர். திருக்கோவில் மூத்த தீட்சிதர்களே வந்திருந்து நேரில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று செய்து வரும் உதவி அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.