Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய சுகாதாரத்துறை செலவு ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.13,000 கோடி - உள்கட்டமைப்பு, சோதனைகள், உபகரணங்களுக்காக செலவானதாக தகவல்.!

மத்திய சுகாதாரத்துறை செலவு ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.13,000 கோடி - உள்கட்டமைப்பு, சோதனைகள், உபகரணங்களுக்காக செலவானதாக தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jun 2020 8:36 AM GMT

COVID-19 தொற்றுநோய்க்கு எதிராக முழு வீச்சாக சுகாதாரப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுகாதாரத்திற்கான மத்திய அரசாங்கத்தின் செலவு கிட்டத்தட்ட 13,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சென்ற ஆண்டு இதே மாதத்தில் பதிவாகி இருந்த ரூ .4,327 ஐ விட 3 மடங்கு தொகை இந்த மாதத்தில் மிகவும் அதிகரித்துள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது .

வேறு வழியில் சொல்லப் போனால் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தனக்கு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 19 சதவீதத்தை ஏப்ரல் மாதத்தில் மட்டும் நடப்பு நிதியாண்டில்செலவிட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 2019 ஏப்ரலில் ஏழு சதவீதமாகவும் , 2018 ல் மூன்று சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கான இந்த செலவு விகிதம் இப்படியே தொடருமானால் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட முழு நிதியும் ஐந்து மாத காலத்திற்குள் தீர்ந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரித்த செலவினங்களில் கணிசமான பகுதியானது சோதனைத் திறனை வளர்ப்பதற்கும் சோதனை கருவிகளை வாங்குவதற்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்டது என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கருவிகள் மற்றும் பிற மருத்துவ கருவிகளை வாங்குவதற்காகவும் அதிகம் செலவிடப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தைப் பொறுத்தவரையில், ஓராண்டிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 13 சதவீதத்திற்கும் மேலாக அதாவது 2,100 கோடி செலவினம் அதிகரித்துள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

https://swarajyamag.com/insta/centres-expenditure-on-health-shoots-up-more-than-three-times-in-april-spends-19-per-cent-of-annual-allocation

Next Story
கதிர் தொகுப்பு
Trending News