Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழ் உள்பட 14 மொழிகளில் பிரச்சாரம் செய்வதற்கு ஜோ பிடேன் திட்டம்.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழ் உள்பட 14 மொழிகளில் பிரச்சாரம் செய்வதற்கு ஜோ பிடேன் திட்டம்.!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமிழ் உள்பட 14 மொழிகளில் பிரச்சாரம் செய்வதற்கு ஜோ பிடேன் திட்டம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 10:23 AM GMT

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடேன் இந்திய மக்களின் ஓட்டை பெறுவதற்கு தமிழ் உள்பட 14 இந்திய மொழிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக திட்டம்.

வருகிற நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் தற்போதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். பின்பு ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன் போட்டியிடுகிறார். அமெரிக்கா உடைய மக்கள் தொகையில் 28 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர். இது அதிபர் தேர்தலுக்கு முக்கியமான ஓட்டுக்கள். இதனால் டிரம்ப் மற்றும் பிடன் இருவரின் காட்சிகள் இந்த ஓட்டு வங்கியை பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர்.

தற்போது இதற்காக பிடேனின் பிரச்சார குழு, 14 இந்திய மொழிகளில் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, உருது, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி உள்பட மொழிகளும் உள்ளது.

இந்நிலையில் சில வாக்கியத்தை உருவாக்கியுள்ளனர். அதில் "அமெரிக்கா கா நேதா கைசா ஹோ, ஜோ பிடன் ஜெய்சா ஹோ" (அமெரிக்கா உடைய தலைவர் பிடனைப் போல் இருக்க வேண்டும்). இதை போலவே பல வாக்கியத்தை தயார் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பே அமெரிக்கா தேர்தலில் இந்தியா மொழிகளை பயன்படுத்தி உள்ளனர். சென்ற அதிபர் தேர்தலில் டிரம்புக்காக "ஆப் கி டிரம்ப் சர்க்கார்" என்கிற வாக்கியத்தை வைத்து பிரசாரம் செய்துள்ளனர். அந்த வாக்கியம் இந்தியாவில் பிரதமர் மோடிக்காக "ஆப் கி மோடி சர்க்கார்" என்கிற வாக்கியம் உருவாக்கப்பட்டது. அந்த வாக்கியம் மூலம் டிரம்ப் அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story