Kathir News
Begin typing your search above and press return to search.

குடிசை பகுதி மக்களை மிரட்டும் பைனான்ஸ் நிறுவனங்கள் - பாதுகாப்பு வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு.!

குடிசை பகுதி மக்களை மிரட்டும் பைனான்ஸ் நிறுவனங்கள் - பாதுகாப்பு வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு.!

குடிசை பகுதி மக்களை மிரட்டும் பைனான்ஸ் நிறுவனங்கள் - பாதுகாப்பு வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2020 3:11 AM GMT

கொரோனா நச்சு பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்து செயல்படுத்தி வரும் சூழளில் வேலை வாய்ப்பு இன்றியும் வருமானம் இன்றியும் அவதியுறும் மக்களை அவதிக்குள்ளாக்கும் தனியார் நிதி நிறுவனங்கள். கடலூர் மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறுவனங்கள் மகளீர் சுயஉதவி குழு பெண்களை குறிவைத்து தேடி தேடி கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் தங்களின் கோர முகத்தை கொரோனா தடை காலத்தில் பெண்களின் மானத்தோடு விளையாடி வருகின்றனர்.

சினிமா படங்களை மிஞ்சும் அளவில் தனியார் நிதி நிறுவன செயல்பாடுகள் அமைந்துள்ளன வீடு புகுந்து பொருட்களை சூறையாடுவது பெண்களை ஆபாசமாக பேசுவது கடன் பெற்ற பெண்களின் கணவர்களின் செல்போனில் தொடர்பு கொள்ளும் தனியார் நிதி நிறுவன குண்டர்கள் தங்கள் மனம் போன போக்கில் பேசி மணமுறிவை ஏற்படுத்தி வருகின்றனர். தனியார் நிதி நிறுவன குண்டர்கள் பணத்தை வசூல் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் புவனகிரி சிதம்பரம் விருத்தாசலம் திட்டக்குடி பண்ருட்டி கடலூர் பகுதி பெண்கள் தங்கள் பகுதி வட்டாட்சியர்களிடம் மனு அளித்துள்ளனர். மத்திய அரசு வழங்கிய எந்த உத்தரவினையும் செயல்படுத்த ஆர்வம் செலுத்தாத மாவட்ட நிர்வாகத்தில் அலட்சியத்தால் பெண்கள் மோசமான நிலைக்கு தள்ளபட்டுள்ளனர் இது ஏதோ கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஏறப்பட்டுள்ள பிரச்சனை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தனியார் நிதி நிறுவனங்கள் கடன் ஈவு தொகையை வசூல் செய்ய குண்டர்களை நியமித்து அட்டகாசம் செய்து வருகின்றனர்

கடலூர் மாவட்டத்தில் குடிசை பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு புறம்பாக வட்டிக்கு வட்டி போட்டு தவணை பணத்தை உடனடியாக கட்டுமாறும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கடலூர் முதுநகர் மாலுமியார்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் வெங்கடேசன் என்பவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனிடம் மனு அளித்தனர். மனுவில், மிரட்டல் விடுக்கும் பைனான்ஸ் கும்பலிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:

தினக்கூலிகள், விவசாயத் தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், மாட்டு வண்டித்தொழிலாளர்கள், மீனவர்கள், சிறு வியாபாரிகள் கொரோனா ஊரடங்கு தடையால் வேலை இழந்தனர். அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடின. சாப்பாட்டிற்கே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஏற்கனவே அவர்கள் வழங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு பணத்தை உடனடியாக கட்டுமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். வேலை இல்லாததால் கடந்த மூன்று மாதங்களாக பணம் செலுத்தவில்லை. இன்னும் வேலையின்றி தொழிலாளர்கள் வீடுகளில் உள்ளனர். பைனான்ஸ் நிறுவனங்கள் 6 மாதங்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் அறிவித்தும் அந்த உத்தரவுகளை காலில் போட்டு மிதித்து ஏழை எளிய மக்களை மிரட்டி வருகின்றனர்.

இந்த நிலையிலும் இவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது. கடன் பெற்றவர்களை அடிக்கடி சந்தித்து கடந்த மூன்று மாதங்கள் செலுத்த வேண்டிய தொகையாக கேட்டு நச்சரித்து வருகின்றனர். மனம் புண்படும் படி பேசுகின்றனர். கொரோனா பாதிப்பு அச்சத்தைவிட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் மிரட்டலால் ஏழை எளிய மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.ஏற்கனவே அரசு தடைவிதித்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் இந்த மைக்ரோ பைனான்ஸ் கும்பல்களிடமிருந்து ஏழைத்தொழிலாளர் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டாள் மட்டுமே மகளீர் தன்உதவி குழு பெண்களின் தற்கொலைகளை தடுக்க முடியும். மத்திய மோடி அரசு கொண்டு வரும் பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் மூலம் கடன் பெற்று சுய கௌரவத்துடன் வாழ விழிப்புணர்வை மாநில அரசும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மகளீர் திட்ட அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

மோடி அரசு கொண்டுவந்த பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நமது மகளீர் சமுதாயத்திற்க்கு ஏற்ப்படுத்தபட வேண்டும்.

Next Story