Kathir News
Begin typing your search above and press return to search.

ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு - ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வலியுறுத்தல்.!

ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு - ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வலியுறுத்தல்.!

ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு - ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வலியுறுத்தல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2020 10:09 AM GMT

நடிகர் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு அறிக்கையில் வெளிவந்துள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளது:

கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு, ரஜினி உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள்.

ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!


இவ்வாறு ரஜினி மக்கள் மன்றம் வெளிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

Next Story