Kathir News
Begin typing your search above and press return to search.

மக்களை நேரடியாக சென்று சேரும் மோடி அரசின் திட்டங்கள் - பயனடைந்தோர் முகநூலில் பதிவு.!

மக்களை நேரடியாக சென்று சேரும் மோடி அரசின் திட்டங்கள் - பயனடைந்தோர் முகநூலில் பதிவு.!

மக்களை நேரடியாக சென்று சேரும் மோடி அரசின் திட்டங்கள் - பயனடைந்தோர் முகநூலில் பதிவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Jun 2020 11:01 AM GMT

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஊரடங்கால் ஏற்பட்ட இழப்பில் இருந்து மீண்டு வர உதவி செய்யும் வகையில் மத்திய அரசு அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன்படி வங்கிகள் ஏற்கனவே கடன் வாங்கியுள்ள சிறு குறு நடுத்தர தொழில்களில் ஈடுபட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 100% உத்திரவாதமின்றி கடனுதவி செய்து வருகின்றன. இந்த திட்டத்தில் அதிகம் பயனடைந்து தமிழகம் முதலிடத்தில் இருக்கும் செய்தி அண்மையில் வெளியானது. இத்திட்டத்தின் கீழ் 2,88,686 தொழில் முனைவோருக்கு ₹ 17,705.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 1,51,531 வங்கிக் கணக்குகளில் ₹ 8,320.24 கோடி‌ ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதில் 33,725 தொழில் முனைவோருக்கு ₹ 2,018.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 18,867 வங்கிக் கணக்குகளில் ₹ 1325.08 கோடி நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பயனடைந்த தொழில் முனைவோர்களில் ஒருவர் முகநூலில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கியுள்ள அவருக்கு சில நாட்களுக்கு முன் அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் 29.02.2020 அன்று நிலுவையில் உள்ள கடன் தொகையில் 20% கடனாக வழங்கப்படவிருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து வங்கிக்கு சென்று விசாரித்த போது வங்கி மேலாளர் அவருக்கு கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். அதன் பின் மேலாளர் வழிகாட்டுதலில் ஆவணங்களை சரிபார்த்து கையொப்பமிட்டுள்ளார். அவருக்கு முதலில் குறுஞ்செய்தி வந்ததிலிருந்து 10 நாட்களிலேயே நிதி அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது.





"இரண்டு மாத தொழில் முடக்கத்திற்கு பிறகு தொழிலை மீண்டும் ஆரம்பிக்க போதுமான முதல் இல்லாமல் தொழில் முனைவோர் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வளவு குறைந்த வட்டியில் மத்திய அரசு செய்யும் இந்த ஆபத்துக்கால கடனுதவி மிக மிக உபயோகமானது.

இந்த அருமையான திட்டத்தை தீட்டி செயல்படுத்திய திரு.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், ரிசர்வ் வங்கிக்கும், ஒழிக்க ஒழியாது என் உறவான எஸ்பிஐ வங்கிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அவசரகால கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் பிற வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உத்திரவாதம் இன்றி ஏற்கனவே கடன் பெற்ற சிறு குறு நடுத்தர தொழில் முனைவோருக்கு கடனுதவி அளிக்கின்றன. இதற்காக முன்னரே 3 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில் மேலும் 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்‌ என்று நிதியமைச்சர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தேசிய கடன்‌ உத்திரவாத நிறுவனம்(National Credit Guarantee Trustee Company) நிதி உதவி செய்யும். அந்த நிதியை தொழில் முனைவோருக்கு வங்கிகள் விநியோகம் செய்யும். இந்த திட்டத்தால் பயன்‌ பெறுவோர் முதல் ஒரு‌ வருடத்திற்கு அசல் செலுத்தத் இவை இல்லை என்பதும் வட்டி மட்டும் செலுத்தினால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் பயன் பெறலாம்?

  • 2019-20 நிதியாண்டில் ₹ 100 கோடி வரை டர்ன்ஓவர் செய்து ₹ 25 கோடி வரை கடன்‌ தொகை நிலுவையில் உள்ள சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்
  • சொந்தநிறுவனங்கள், பங்குதாரர் உள்ள நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள் ஆகியவை
  • ஏற்கனவேவங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளராக இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். புதிய வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது.
  • பிப்ரவரி29 அன்று கடன் கணக்கு தொடங்கி 60 நாட்களாகி இருக்க வேண்டும். மேலும் கடன் வாங்கியவரின் எயரில் வராக்கடன் இருக்க கூடாது
  • பிரதமமந்திரி முத்ரா யோஜனா வின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்
  • இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மேலதிக கடனுக்கு தனியாக புதிய கடன் கணக்கு துவங்கப்படும்.

மத்திய அரசு பொருளாதாரத்தை மீட்டெடுக்க நேரடியாக தொழில்களுக்கு கடனுதவி வழங்கியும் அதன்மூலம் மறைமுகமாக மக்களுக்கும் உதவ பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் தொழில் முனைவோரும் அவர்களுக்கு கிடைக்கும் பயனை தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story