Kathir News
Begin typing your search above and press return to search.

யோகி ஆதித்யநாத் கருத்துக்களால் நேபாள நாட்டு அரசியல்வாதிகள் மிரள்வது ஏன் - அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து கூறும் காரணங்கள்.!

யோகி ஆதித்யநாத் கருத்துக்களால் நேபாள நாட்டு அரசியல்வாதிகள் மிரள்வது ஏன் - அரசியல் நிபுணர்கள் ஆராய்ந்து கூறும் காரணங்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jun 2020 7:42 AM GMT

இந்தியா சுதந்திரம் பெற்றபோது நேபாளம் தனி நாடு என அறிவிக்கப்பட்டாலும் அது இந்திய அரசின் பாதுகாப்புக்கு உட்பட்ட நாடாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடைப்பட்ட நேபாள எல்லைப் பகுதிகள் தொடக்கத்தில் இருந்தே இந்திய இராணுவ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் உள்ளது. நேபாளம் ஒரு நூறு சதவீத இந்து நாடு என்பதால் அதன் கலாச்சாரம் அயலார் ஊடுருவலால் குறிப்பாக சீன ஊடுருவலால் ஒரு போதும் குலையக் கூடாது என்ற நோக்கத்திலேயே அது இன்று வரை பராமரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேபாளத்தில் சீனாவால் தூண்டிவிடப்படும் இடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு அவ்வப்போது முன்மொழியப்படுகின்றன. குறிப்பாக இந்திய ராணுவப்படைகள் அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும் என்ற வாதம் அங்கு முன் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சீன – இந்திய எல்லைப் பகுதிகளில் குறிப்பாக கிழக்கு திபெத் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. அதே நேரத்தில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதைப் போல சீனா நேபாளத்தை தூண்டியதன் பேரில் இந்திய படைகள் தற்போது நிலை கொண்டிருக்கும் லிபுலேக், கலபானி மற்றும் லிம்பியாதுரா திபெத்- எல்லைப் பகுதிகள் தங்களுக்கு மட்டுமே உட்பட்ட பகுதி என்பதை கூறும் வகையில் புதிய வரைபடம் ஒன்றை முதலில் நேபாளத்துக்கு உட்பட்ட லிபுலேக் பிரதேச நிர்வாகம் வெளியிட்டது.

இதற்கு நேபாளமும் பச்சை கொடி காட்டியது. மேலும் இந்த பகுதியில் 80 கி.மீ. சாலை ஒன்றை இந்தியா அமைத்து திறக்கும் நிலையில் நேபாளம் ஆட்சேபனை தெரிவித்தது. மேலும் 1960 களின் முற்பகுதியில் இருந்து இந்தியா தனது ஆயுதப்படைகளை இந்த பகுதிகளில் நிறுத்தியது என்றாலும் இது இந்திய பகுதிகள் இல்லை. நேபாளத்துக்கு மட்டுமே சொந்தமான பகுதிகள் எனக் கூறி புதிய பிரச்சினையை உருவாக்கியது.

நேபாளத்தின் இந்த செயல் இந்திய நிலைப்பாட்டுக்கு எதிரானது என்பதால் இந்தியா தனது ஆட்சேபத்தை கூறியது.

இந்த நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் ஒரு நேர்காணலின் போது, நேபாளம் தனது அரசியல் எல்லைகளை நிர்ணயிக்கும் போது "திபெத்தின் தவறை மீண்டும் செய்யக்கூடாது, நேபாளம் அதன் பின் விளைவுகளைப் பற்றி மீண்டும் ஒரு முறை யோசிக்க வேண்டும், தலாய்லாமா பிரச்சினையில் திபெத்துக்கு முன்பு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும் இந்தியா மற்றும் நேபாளம் இரண்டும் வெவ்வேறு ஆட்சியின் கீழ் தனி நாடுகளாக இருந்தாலும் அவற்றின் ஆன்மா ஒன்றுதான்.இரு நாடுகளுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலாச்சார, வரலாற்று மற்றும் புராண தொடர்புகள் உள்ளன, நேபாளம் இதை நினைவில் கொள்ள வேண்டும்," என்றும் கூறினார்.

ஆதித்யநாத்தின் இந்த கருத்தும், பேச்சும் உண்மையில் நேபாள அரசை கதி கலங்க செய்துவிட்டன என்றே கூறலாம். அவர் இந்த கருத்தை கூறியதும் நேற்று நேபாள பாராளுமன்றம் கூடி மீண்டும் இந்திய எல்லைப் பிரச்சனைகளை பற்றி விவாதித்தத்துடன் லிபுலேக் பிராந்திய புதிய வரைபடத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெற்று சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் வழங்கியது.

அப்போது பல நேபாள பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசை கூட விமரிசிக்கவில்லை, ஆனால் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட கருத்துக்களை கடுமையாக ஆட்சேபித்து பேசினர் என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி பேசுகையில்" இந்திய- நேபாள எல்லை பிரச்சினைகள் குறித்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்துக்கள் நேபாள அரசை அச்சுறுத்தும் கருத்துக்கள், இது அவர் பொறுப்பேற்காத விஷயம் என்பதுடன், நேபாளத்துக்கு உரிய பகுதிகளை அவர் கேள்விக்கு உள்ளாக்கியது எங்களை சங்கடத்துக்கு உள்ளாகியுள்ளது, இந்திய அரசு இனிமேல் யோகி ஆதித்யநாத்தை இந்தவிஷயத்தில் தலையிட வேண்டாம் என கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிலையில், யோகி ஆதித்யநாத் கருத்துக்களுக்கு நேபாளம் அதிகம் முக்கியத்துவம் அளித்ததுடன், ஏன் அவரைக் கண்டு நேபாள அரசு மிரள்கிறது என்பதற்கு அரசியல் நிபுணர்கள் பதில் கூறுகையில்:

யோகி ஆதித்யநாத் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வர் மட்டுமல்ல. இந்திய - நேபாள எல்லையில் உள்ள கோரக்நாத் கோவில் ஆதீனத்தின் தலைமை துறவியாகவும் உள்ளார். இங்குள்ள கேதார்நாத் உட்பட அனைத்து நாத் கோவில்களிலும் அதன் அறப் பணிகளிலும் முக்கிய தொடர்புகளை கொண்டவர். இந்த கோவில்களுக்கு அதிக அளவில் வந்து செல்லும் பக்தர்கள் நேபாள பக்தர்கள் ஆவார்கள். நேபாளம் முழுவதும் யோகி மிகவும் பிரபலமானவர், ஆன்மீக வழியில் செல்வாக்கானவர்.

ஹிந்து வேதங்களை நன்கு படித்த சிறந்த இளம் துறவியான இவர் இந்திய அரசியலிலும் சிறந்த ஆன்மீக – அரசியல் நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கியுள்ளதால் வட இந்திய மக்களைப் போலவே நேபாள மக்களையும் மிகவும் கவர்ந்து வருகிறார். இதனால் நேபாளத்தில் புதிதாக எழுச்சி பெற தொடங்கியிருக்கும் இடதுசாரிகள் ஆதித்யனாத்திடம் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் யோகி நேபாள இந்திய எல்லை விவகாரத்தில் கூறிய கருத்துக்கள் தங்கள் நாட்டுக்குள் எதிர் விளைவுகளை உருவாக்குவதுடன், பின்னர் நேபாளமே யோகி மயமாகி மீண்டும் நேபாளம் இந்தியமயம் ஆகிவிடுவதற்கான வாய்ப்பு உருவாகிவிடும் என்றும், நேபாளிகளை மதம் சார்ந்த கருத்துக்களால் யோகி வளைத்து விடுவார் என்றும் அவர்கள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் நேபாளம் தனி நாடாக புவியியல் அமைப்பில் இருந்தாலும் அங்கு சமய- சாதி சூழல்கள் யோகிக்கு சாதகமானவை. இதன் விளைவுதான் யோகியை அடக்கிவையுங்கள் என்று அவர்கள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் கூறினர்.

https://www.hindustantimes.com/india-news/nepal-pm-criticises-yogi-adityanath-s-threatening-remarks-on-border-row/story-RcMUtqcAcVfyVxUoOqvYpJ.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News