Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து கோயில் விழாவில் பக்தர்கள் கலந்துக்கொள்ள கூடாது - இலங்கை அரசு அடாவடி!

இந்து கோயில் விழாவில் பக்தர்கள் கலந்துக்கொள்ள கூடாது - இலங்கை அரசு அடாவடி!

இந்து கோயில் விழாவில் பக்தர்கள் கலந்துக்கொள்ள கூடாது - இலங்கை அரசு அடாவடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 8:11 AM GMT

இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பு இலங்கை வாழ் இந்துக்களை கலக்கமடைய வைத்துள்ளது. கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் நிலவி வந்தது, இதனால் அனைத்து துறையும் முடங்கியது தற்போது உலக நாடுகள் அனைத்தும் தளர்வுகளை அறிவித்துள்ளனர்.

கொரோனா அச்சத்தில் இருந்த மக்கள் தற்போது மெல்ல தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். மேலும், உள்நாட்டு போக்குவரத்து துவங்கியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் கூடுவதை தடுத்து வந்தனர். ஓரளவுக்கு நிலமை சீரடைந்து வருகிறது, இதன் காரணமாக தற்போது கட்டுபாடுகளுடன் வழிபாட்டு இடங்களில் வழிபாடுகள் நடத்த பெரும்பாலான நாடுகள் அனுமதி வழங்கி வருகின்றனர்.

இலங்கையின் யாழ்பானம், திரிகோணமலை, கதிர்காமம், நல்லூர் அகய இடங்களில் உள்ள இந்துக் கோயில்களில் வழிபாடுகள் நடத்த பக்தர்களுக்கு அனுமதி இல்லை என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது. இந்து பக்தர்கள் பெரும்பாலும் பாதயாத்திரையாக சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். மேலும், முருகன் கோயிலுக்கு காவடி சுமந்து செல்வது தமிழ் இந்துக்கள் கடைபிடிக்கும் மரபு வழி வழிபாட்டு முறையாகும். அதற்கும் தடை விதிப்பதாக இலங்கை ஜனாதிபதி கோத்தபையா ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இந்து கோயில் திருவிழாவை நடத்தவும் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசின் அறிவிப்பால் கோயில் திருவிழாவை வேறு ஒரு நாளில் நடத்துவது என சைவ வழிபாட்டு மன்றம் மற்றும் முருகன் கோயில் அறங்காவலர் குழுக்கள் கூறியுள்ளனர். இந்தியாவை விட விஷேசமகாவும் விமர்சியாகவும் கோயில் திருவிழாவை நடத்தும் இலங்கை வாழ் இந்துக்கள் சோகத்தில் உள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News