Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறை - ஓட்டுநர் கைது.!

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறை - ஓட்டுநர் கைது.!

நடிகை ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறை - ஓட்டுநர் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 12:24 PM GMT

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் அதிகமாக வேகமாக பரவி வருகிறது. அதிலும் சென்னையில் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மது கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது.

இதனால் சில பேர் சென்னையை அடுத்து இருக்கும் மாவட்டங்களுக்கு சென்று மது பாட்டில்களை வாங்குவதால் காவல்துறையினர் வாகனகளை சோதனை செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

தற்போது கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் முட்டுக்காடு சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகன பரிசோதனையில் இருந்த கானாத்தூர் காவல்துறையினர். அங்கு வந்த இனோவா காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அந்த சமயத்தில் அந்த காரில் நடிகை ரம்யா கிருஷ்ணா மற்றும் அவருடைய சகோதரி வினயா கிருஷ்ணன் ஆகிய இருவரும் இருந்துள்ளனர். பின்பு காரை சோதனை செய்ய ரம்யா கிருஷ்ணன் அனுமதி கொடுத்தார். பின்னர் சோதனை செய்ததில் காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் செல்வ குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Next Story