Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா அம்மனுக்கு வழிபாடு நடத்தும் கேரள மக்கள் - வேகமாக பரவும் கொரோனா அம்மன் வழிபாடு.!

கொரோனா அம்மனுக்கு வழிபாடு நடத்தும் கேரள மக்கள் - வேகமாக பரவும் கொரோனா அம்மன் வழிபாடு.!

கொரோனா அம்மனுக்கு வழிபாடு நடத்தும் கேரள மக்கள் - வேகமாக பரவும் கொரோனா அம்மன் வழிபாடு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jun 2020 10:53 AM GMT

நமது இந்து புராணத்தில் சுராசுரன் எனும் காய்ச்சலை உருவாக்கும் அசுரன் இருப்பதை இந்துமத புராணம் உறுதிபடுத்துவதை போன்று, அதர்வண வேதத்தில் உள்ளதை போன்று அசுரர்களை அழிக்க காளி அவதாரம் எடுத்ததை போன்று, தற்போது கேரளாவில் கொரோனா எனும் அசுரனை அழிக்க அம்மன் வழிபாடு வேகம் எடுத்துள்ளது.

மக்களுக்கு நோய்களை உருவாக்குவது அசுரர்களின் வேலை என இந்து புராணம் நமக்கு உணர்த்தியுள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு கோயில் ஒன்றை எழுப்பி கோரோனா அம்மனை எழுந்தருளச் செய்து பூஜைகள் நடத்தி வருகிறார் பூஜாரி ஒருவர்.

தெர்மாகோல் மூலம் தற்காலிக கோயிலை எழுப்பிய பூஜாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கேரளாவில் கொல்லம் நகரில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.

தெர்மோகோல் மூலம் தயாரிக்கப்பட்டு பல்லிவல் மீது அமர்ந்திருக்கும் கொரோனா தேவி எந்த மூலமந்திரமும் இல்லாத தெய்வம் ஆகும்.

கேரளாவில், பெரியம்மை நோய்க்கான தெய்வம் உள்ளது, இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல, அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும்.

இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர், வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல.

தரிசனம் இல்லை என்றாலும், கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல்

இந்த ஆலயத்தை அனிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் உருவத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜைகள் செய்து வருகிறார்.

கொரோனா அம்மன் வழிபாடு குறித்து அனிலன் கூறியதாவது 33 கோடி இந்து கடவுள்களில் மேலும் ஒரு அவதாரம்தான் இந்த கொரோனா அம்மன்.

தொற்று நோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரது பாதுகாப்புக்காக நான் இந்த தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்தி வருகிறேன்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News