Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: சமூக இடைவெளியை இல்லைன்னா ஜூலையில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா - கிரண் பேடி எச்சரிக்கை!

புதுச்சேரி: சமூக இடைவெளியை இல்லைன்னா ஜூலையில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா - கிரண் பேடி எச்சரிக்கை!

புதுச்சேரி: சமூக இடைவெளியை இல்லைன்னா ஜூலையில் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா - கிரண் பேடி எச்சரிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Jun 2020 4:16 AM GMT

புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 286-ஆகவும் இதுவரை கொரோனாவால் 7 பேர் இறந்துள்ளனர்.

இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொது மக்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிவுறுத்தி உள்ளார். அதில் சமூக இடைவெளி, முககவசம், கிருமிநாசினி பயன்படுத்துதல் அவசியம். சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் உருவாகிறார்கள். இந்நிலை தொடர்ந்தால் ஜூலை மாதத்தில் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகும். யாருக்கு வேண்டுமாலும் தொற்று ஏற்பட்டு பாதிப்பு உருவாக வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கிய சேது செயலியை தரவிறக்கம் செய்யுங்கள்.

முதலில் உங்களை காப்பாற்றிக்கொள்வது அவசியம். புதுச்சேரி அரசு விதிக்கும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். அதை மீறி எவ்வாய்ப்பையும் நீங்களாக எடுக்காதீர்கள். கூட்டாக எதிர்கொள்ளும் கடும் அபாயங்களை உணர்வது நமது கடமை. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தும் போது புதுச்சேரியில் மேலும் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதிகபட்ச முன் தற்காபப்பு முயற்சி அவசியம். அரசு தற்போது அதிகளவில் நடவடிக்கை எடுப்பது போல் தனிப்பட்ட நபர்களும் அதிகளவில் முன்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை ரெட் அலார்ட் ஆகவோ, கோவிட் அலார்ட்டாவோ கருத்தில் புதுச்சேரி மக்கள் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story