Top
undefined
Begin typing your search above and press return to search.

150 வயதான ஆலமரத்திற்காக சொத்துக்களை பிரிக்காமல் வாழும் ஒரு குடும்பம்.!

150 வயதான ஆலமரத்திற்காக சொத்துக்களை பிரிக்காமல் வாழும் ஒரு குடும்பம்.!

BharathiBy : Bharathi

  |  17 Oct 2020 11:00 AM GMT

சென்னையில் பரவலாக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ஆனால் பெரம்பலூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கண்ணம் பாடியில் ஒரு விவசாய குடும்பம் 150 வயதான ஆல மரத்தை வெட்டக்கூடாது என்பதற்காக தங்களுடைய சொத்துக்களைக் கூட பிரிக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அந்த மரத்தை பராமரித்து வருகிறார்கள்.



ஏழு பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் தங்களுடைய சொத்துக்களை அனைவரும் எடுத்துக் கொண்டால், கட்டாயம் ஆலமரத்தை வெட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே அவற்றை செய்யாமல் அந்த ஆலமரத்திற்கு அருகில் ஒரு கோவில் கட்டி, அந்த ஆலமரத்தில் தங்களுடைய முன்னோர்கள் வாழ்ந்து வருவதாகவும், அவற்றை நாங்கள் எங்கள் முன்னோர்களின் மறு ரூபமாக பார்க்கிறோம் என்று கூறி அவற்றை 150 வயதான ஆலமரத்தை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பார்த்து வருகிறார்கள்.

இதைப்பற்றி குடும்ப உறுப்பினர்கள் ஒருவரான எஸ். பிரதீப் கூறுகையில், "எனக்கு இந்த ஆலமரம் எத்தனை வயது என்றெல்லாம் தெரியாது ஆனால் என்னுடைய தந்தை இந்த ஆல மரத்தை சுற்றி விளையாட தாகவும், பெரிய ஆலமரங்கள் நமது முன்னோர்களுக்கு ஒப்பாகவும் கருதப்படுகிறது.

ஆல மரத்தின் மீது எங்களுடைய நம்பிக்கை வலுவானது. மேலும் அதனால் தான் இத்தனை வருடங்களாக நாங்கள் சொத்துக்களை பிரிக்காமல் உள்ளோம். எங்களுடைய விவசாய குடும்பம் செய்யும் நிலத்தை நம்பி விவசாயம் செய்து வருகிறது எங்களுக்கு பல்வேறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் நாங்கள் இந்த சொத்தை பிரிக்க யாரும் கேட்டதாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை" என்று கூறினார்.

பெரம்பலூரைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் விவசாய ஆர்வலர் ரமேஷ் கருப்பையா கூறுகையில்," நான் ஒரு வாரத்திற்கு முன்பு, நான் அந்த இடத்தை பார்வையிட்டேன். மரம் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அதை விட பழையதாக இருக்கலாம். அதன் சரியான வயதை அறிய நாம் அறிவியல் பூர்வமாக சரிபார்க்க வேண்டும். அதை உற்பத்தி முறையில் கவனித்துக்கொள்வதற்கான வழிகளை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.

மேலும் ரமேஷின் அவர்கள் கூற்றுப்படி, "நாங்கள் பல புனித தோப்புகளை தமிழ்நாட்டில் நாம் இழந்துவிட்டோம். இது ஒரு புனித தோப்பு அல்ல, ஆனால் மக்கள் ஒரு பழைய மரத்தை மிகுந்த கவனத்துடன் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதற்கான கதை. இன்று பார்ப்பது அரிது. மக்களின் கலாச்சார மற்றும் சமூக வாழ்க்கையில் ஒரு மரம் எவ்வளவு முக்கியமானது என்பதை இது காட்டுகிறது, "என்று அவர் கூறினார்.

Next Story