Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி: சூரிய கிரகணம் - அடைக்கப்பட்ட கோவில் நடைகள்!

புதுச்சேரி: சூரிய கிரகணம் - அடைக்கப்பட்ட கோவில் நடைகள்!

புதுச்சேரி: சூரிய கிரகணம் - அடைக்கப்பட்ட கோவில் நடைகள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 Jun 2020 9:05 AM GMT

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நோ்கோட்டில் வருவதே சூரிய கிரகணமாகும். அப்போது, மத்தியில் உள்ள சந்திரன், சூரியனை மறைத்தபடி இருக்கும்.

இந்நிலையில், இன்று சூரிய கிரகணத்தையொட்டி புதுச்சேரி மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவில், வேதபுரீஸ்வரர் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் நடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

இதனால் பக்தர்கள் கோவில் வெளியில் இருந்தபடி கடவுளை வேண்டி சென்றார். மேலும் சூரிய கிரகணம் முடிந்த பின்னர் இன்று மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

Next Story