Kathir News
Begin typing your search above and press return to search.

மலை பகுதிகளில் கொரில்லா போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் களமிறக்கம் - போருக்கு ஆயத்தமா?

மலை பகுதிகளில் கொரில்லா போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் களமிறக்கம் - போருக்கு ஆயத்தமா?

மலை பகுதிகளில் கொரில்லா போர்ப்பயிற்சி பெற்ற வீரர்கள் களமிறக்கம் - போருக்கு ஆயத்தமா?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 2:44 AM GMT

"இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் சீண்டிப் பார்க்க நினைத்தால் தக்க பதிலடி கிடைக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் எவ்விதமான மோதலுக்கும் தயாராகும் விதமாக முப்படைகளும் வீரர்களையும் போர்த்தளவாடங்களையும் நிலைநிறுத்தி வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கொரில்லா போர் முறையில் பயிற்சி பெற்ற மலைப் பகுதியில் போரிடுவதற்கென்றே தயார் செய்யப்பட்ட துருப்புகள் தற்போது வட பகுதி எல்லையில் சீனத் தாக்குதலை எதிர்கொள்ள களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட், கோர்க்கா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மற்றும் லடாக் போன்ற மலைப் பிரதேங்களைச் சேர்ந்த வீரர்கள் அந்த பிரதேசங்களின் சூழ்நிலைக்கு நன்கு பழக்கப்பட்டவர்களாக இருப்பர். எனவே அருகருகே நின்று சண்டையிடுவது போன்ற சூழல்களில் அவர்களை மிஞ்ச அளே இல்லை. எதிரி மலை உச்சியில் இருக்கும் போது மலைப்பகுதியில் போர் என்பது எதிரியின் ஒவ்வொரு வீரருக்கும்‌ நயதூ பத்து வீரர்கள் உயிரிழக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது" என்று ஒரு முன்னாள் ராணுவ தளபதி கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மிகச் சரியாக பன்படுத்தப்படவில்லை என்றால் மலைப்பகுதிகளில் பல மைல் தொலைவு கூட குறி தவறிச் செல்லும். இத்தகைய இடங்களில் அருகில் சென்று தாக்கும் சிறப்புப் படைகளின் தேவை அதிகம் என்று கூறப்படுகிறது. இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கரக்கோரம்‌ மலைத் தொடரின் கே2 சிகரத்திலிருந்து உத்திரகண்டில் இருக்கும் நந்தா தேவி சிகரம் வரையும், சிக்கிம் கஞ்சன்ஜங்கா மலையிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் நம்சே பர்வா வரை படர்ந்திருப்பதால் இப்படைகளின்‌ முக்கியத்துவம் அதிகரிக்கிறது. சீன ராணுவம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் திபெத்திய பீடபூமிப் பகுதி சமமாகவும் இந்தியவின் பக்கம் மலைத் தொடராகவும்‌ உள்ளது. எனவே மலைப்பகுதிகளைப் பிடிப்பதே கடினம், அவற்றைக் காப்பாற்றுவது அதை விடக் கடினம் என்பது இந்திய ராணுவத்துக்கு சாதகமான நிலை என்று கூறப்படுகிறது.

எல்லையில் சீன துருப்புகள் வாலாட்டினால் உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் மலைப் பயிற்சி பெற்ற சிறப்புப் படை வீரர்கள் எல்லையில் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய பயிற்சி பெற்ற கடக்(Ghatak) பிரிவு வீரர்கள் காலாவானில் நடந்த மோதலில் சீன வீரர்களின் முதுகெலும்பை முறித்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story