Kathir News
Begin typing your search above and press return to search.

சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் - அடல் பிகாரி வாஜ்பாய் கூறிய தகவல்கள்.!

சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் - அடல் பிகாரி வாஜ்பாய் கூறிய தகவல்கள்.!

சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் - அடல் பிகாரி வாஜ்பாய் கூறிய தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 5:48 AM GMT

சியாமா பிரசாத் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவில், உயர்நீதிமன்ற நீதியரசரும், கொல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருமான சர் அசுதோசு முகர்சி - ஜோகமாயா தம்பதியருக்கு 6 சூலை 1901இல் பிறந்தார்.

சியாமா பிரசாத் முகர்ஜி 1929ஆம் ஆண்டில் மேற்கு வங்காள மாகாண சட்ட மேலவைக்கு கல்கத்தா பல்கலைக்கழகம் சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, மேற்கு வங்க மாகாண சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வென்றார். 1941 – 1942 ஆண்டில் அம்மாநில நிதி அமைச்சராக பணி செய்தார்.


1937 – 1941 காலகட்டத்தில் விவசாய-மக்கள் கட்சி மற்றும், முஸ்லிம் லீக் கட்சிகளின் கூட்டணி அரசின் போது, எதிர்கட்சித் தலைவரானார். பின்னர் இந்து மகாசபையில் இணைந்து, இந்து மக்களுக்காக குரல் கொடுத்தார். 1944ஆம் ஆண்டில் இந்து மகாசபையின் தலைவரானார்.

பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் தலைமையிலான, விடுதலை இந்தியாவின் இடைக்கால நடுவண் அரசில், சியாமா பிரசாத் முகர்ஜி வணிகம் மற்றும் தொழில் அமைச்சரானார்.

1950ஆம் ஆண்டில்,லியாகத்-நேரு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை காரணமாக, முகர்ஜி 6 ஏப்ரல் 1950ஆம் ஆண்டில் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகியதால், முகர்ஜி மேற்கு வங்க மக்களின் நாயகன் ஆனார்.

ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் தலைவர் எம். எஸ். கோல்வால்கருடன் கலந்தாய்வு செய்த பின், 21 அக்டோபர் 1951ஆம் ஆண்டில் பாரதிய ஜனசங்கம் கட்சியை தில்லியில் தோற்றுவித்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவரானார். 1952ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஒரு தொகுதியில் முகர்ஜி வெற்றி பெற்றவர்

ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.

காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 23 சூன் 1953இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது

காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண இரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்கவில்லை. இதனால் இன்று வரை முகர்ஜியின் மரண சர்ச்சை தீரவில்லை.

சியாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவகர்லால் நேருவின் சதித் திட்டம் என அடல் பிகாரி வாஜ்பாய் 2004இல் குறிப்பிட்டுள்ளார்

முகர்ஜியின் நினைவுநாளை பாரதீய ஜனதா கட்சி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கடைபிடிக்கிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக அனைத்து மண்டல்களிலும் நினைவுநாள் புஷ்பாஞ்சலி நேற்று அனுசரித்தது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News