Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா முழுவதும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு வருகிறது - அதிரடி அவசர சட்டம்!

இந்தியா முழுவதும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு வருகிறது - அதிரடி அவசர சட்டம்!

இந்தியா முழுவதும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்கு வருகிறது - அதிரடி அவசர சட்டம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 Jun 2020 10:36 AM GMT

வங்கி தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகள்படி தனியார், அரசு வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், வீட்டு வசதி கழகம் ஆகியவற்றில் சீரமைப்பு செய்யப்பட்டபின் கடைசியாக இப்போது கூட்டுறவு வங்கிகளிலும் சீரமைப்பு செய்ய ஏற்கனவே மோடி அரசு முடிவெடுத்தது.

இதன்படி நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது தொடர்பான மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய ஏற்கனவே அரசு முடிவு செய்தது.

இதன் மூலம் நாட்டில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகள், 8.60 கோடி டெபாசிட்தாரர்கள், ₹5 லட்சம் கோடி சேமிப்புத் தொகை இவற்றை பாதுகாக்கும் பொருட்டு இந்த மசோதா கொண்டு வரப்படுவதாகவும், இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளை தடுக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகள் கொண்டு வர மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டதுடன், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பான அவசரச் சட்டத்துக்கும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசு எடுத்த துணிச்சல் மிக்க இந்த நடவடிக்கையால் நாடு முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் இனி உள்ளூர் ஆதிக்க வாத அரசியல்வாதிகளின் பிடியிலிருந்தும், ஊழல் பேர் வழிகளின் கரங்களில் இருந்தும் வெளியேறி இனி 'அனைவருக்குமான வளர்ச்சி' யை சுவாசிக்கும் என கூறப்படுகிறது.

Next Story