Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சீன அரசிடமிருந்து நன்கொடை பெற்ற இராஜீவ் காந்தி அறக்கட்டளை - தோண்ட தோண்ட வெளிவரும் துரோகம்!

ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சீன அரசிடமிருந்து நன்கொடை பெற்ற இராஜீவ் காந்தி அறக்கட்டளை - தோண்ட தோண்ட வெளிவரும் துரோகம்!

ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சீன அரசிடமிருந்து நன்கொடை பெற்ற இராஜீவ் காந்தி அறக்கட்டளை - தோண்ட தோண்ட வெளிவரும் துரோகம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2020 2:53 PM GMT

2008-ல் ராகுல் காந்தி கையெழுத்திட்ட, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான (CPC) இரகசிய ஒப்பந்தங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புகளையும், கண்டங்களையும் சந்தித்து வரும் நேரத்தில் சீனாவுடனான அதன் நெருங்கிய தொடர்புகள் குறித்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு வெளிப்படையான விவரம் வெளி வந்துள்ளது. சீன அரசு 2006-ல் 'ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு' ₹10 லட்சம் நன்கொடை அளித்ததாகவும், அடுத்தடுத்த வருடங்களில் மொத்தம் 1 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றதாகவும் புதிய தகவல் வெளிவந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புகளைக் கொண்ட மற்றும் காங்கிரஸ் தலைவர்களால் நடத்தப்படும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு இந்தியாவின் அப்போதைய சீனத் தூதர் சன் யூக்ஸி ₹10 லட்சம் நன்கொடை அளித்ததாக இந்தியாவில் உள்ள சீன தூதரக இணையதளத்தில் கிடைத்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்திய மக்களிடம் சீன மக்களின் நட்பு உணர்வைக் காண்பிப்பதற்காக, சீன அறக்கட்டளை சார்பாக இந்தியாவின் சீனத் தூதர் திரு. சன் யூக்ஸி, ஜனவரி 27-ஆம் தேதி ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ₹10 லட்சம் நன்கொடை அளித்தார்" என இந்தியாவில் உள்ள சீன தூதரக வலைத்தளம் கூறுகிறது.

அப்போது ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பொதுச்செயலாளராக இருந்த மல்ஹோத்ரா, சோனியா காந்தி கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பாக இந்த நிதியைப் பெற்றிருந்தார்.

ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் தலைவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தான், வேறு யாருமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பி சிதம்பரம் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் அறக்கட்டளையின் அறங்காவலர்கள்.

1991-இல் நிறுவப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளை கல்வியறிவு, சுகாதாரம், இயலாமை, ஏழைகளுக்கு அதிகாரமளித்தல், வாழ்வாதாரங்கள் மற்றும் இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் செயல்படுவதாகக் கூறுகிறது.

எவ்வாறாயினும், காங்கிரஸ்-கட்சி கட்டுப்பாட்டில் உள்ள ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனாவிலிருந்து ஏன் இவ்வளவு பெரிய தொகையை பெறுகிறது என்பது குறிப்பாக புதிரானது, குறிப்பாக 2006-ல் காங்கிரஸ் ஆட்சி செய்த UPA அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது.

சீன அரசாங்கம் 2006-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த ஆண்டுகளிலும் நன்கொடை அளித்தது. இதில், வெளி வந்த ஒரு மோசமான அம்சம் என்னவென்றால், 2005 - 2006-ல் சீனத் தூதரகம் மட்டுமல்ல, சீன அரசாங்கமே ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது,

2006-2007 ஆம் ஆண்டிற்கான அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையிலும், சீன மக்கள் குடியரசு ஒரு நன்கொடையாளராக பட்டியலிடப்பட்டுள்ளது.













ட்விட்டர் பயனர் @by2kaafi சேகரித்த தகவலின்படி, 2006-2007-ஆம் ஆண்டில், சீன அரசு ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ₹90 லட்சம் நன்கொடை அளித்தது. ₹1 கோடிக்கு மேல், ராஜீவ் காந்தி அறக்கட்டளை நன்கொடை பெற்ற பிறகு, சீனாவின் நலன்களை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வைத் தொடங்கியது.

சீனாவில் இருந்து காங்கிரஸ் நிதியைப் பெற்றதாக வெளிவந்த இந்த சமீபத்திய தகவல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஆளும் பா.ஜ.க-வின் தாக்குதலுக்கு ஆயுதத்தை வழங்கும்.

2008, ஆகஸ்ட் 7-ஆம் தேதி பெய்ஜிங்கில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPC) காங்கிரஸ் கட்சி ஒரு 'ரகசிய ஒப்பந்தம்' கையெழுத்திட்டது தெரியவந்ததையடுத்து நாட்டில் ஒரு பெரிய அரசியல் சர்ச்சை வெடித்தது. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இரு கட்சிகளுக்கும் இடையே "முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து ஒருவருக்கொருவர் ஆலோசிக்க வாய்ப்பு" வழங்கியது.

அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் UPA அரசாங்கத்தை வழி நடத்தியது, மன்மோகன் சிங் தலைமையிலான அரசு மீது சூப்பர் அமைச்சரவையாக செயல்பட்ட தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக சோனியா காந்தி இருந்தார். இந்த ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறை அமைச்சர் வாங் ஜியா ரூய் ஆகியோர் சோனியா காந்தி மற்றும் அப்போதைய சீன துணை அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

லடாக் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அண்மயில் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கையெழுத்திட்ட ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுவது மட்டுமின்றி சதி வலைகளை வெளிச்சம் போட்டுள்ளது.

Source: OpIndia

Next Story