Kathir News
Begin typing your search above and press return to search.

புனேவில் சீனா பொருட்களை விற்பதற்கு தடை - கிராம பஞ்சாயத்து அதிரடி.!

புனேவில் சீனா பொருட்களை விற்பதற்கு தடை - கிராம பஞ்சாயத்து அதிரடி.!

புனேவில் சீனா பொருட்களை விற்பதற்கு தடை - கிராம பஞ்சாயத்து அதிரடி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Jun 2020 9:21 AM GMT

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் சீனா நாட்டின் பொருட்களை விற்பதற்கு மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் ஜூலை 1ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளது.

கடந்த 16ஆம் தேதி இந்திய - சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்தியா-சீனா இடையே பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. பின்னர் இந்தியாவில் உள்ள பல இடங்களில் சீனாவை கண்டித்து மாற்று பொருட்களை தவிர்ப்பதற்கு பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், சீனா நாட்டின் பொருட்களை இந்தியா மக்கள் புறக்கணித்து வருகின்றனர்.

தற்போது புனே மாவட்டத்தில் இருக்கும் கோந்த்வே தாவடே கிராம பஞ்சாயத்தின் கூட்டத்தைக் கூட்டி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைத்து கடைகளையும் சீனப் பொருட்களை விற்பதற்கு மற்றும் மக்கள் சீனா பொருட்களை வாங்குவதற்கும் தடை விதிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இந்த தீர்மானத்தை அனைத்து கடைகளின் உரிமையாளருக்கும் கிராம பஞ்சாயத்தால் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story