Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு தொடர்ச்சியாக நன்கொடை வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.!

காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு தொடர்ச்சியாக நன்கொடை வழங்கிய பொதுத்துறை நிறுவனங்கள் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Jun 2020 7:27 AM GMT

மன்மோகன் சிங்கை தனது சார்பில் பிரதமராக நியமித்து இந்தியாவை பின்னால் இருந்து இயக்கிய சோனியா, சென்ற 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை பத்தாண்டுகாலம் ஆண்டார். அந்த காலகட்டத்தில்தான் லட்சக்கணக்கான கோடி ஊழல்கள் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்குவதிலும், அலைக்கற்றை வரிசை ஒதுக்குவதிலும் நடைபெற்றன. உலகம் முழுவதும் காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான திமுகவும் செய்த மகா பெரும் ஊழல்கள் குறித்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

தங்கள் ஆட்சியின்போது சம்பாதித்த முறைகேடான பணத்தை பல்வேறு நாடுகளில் இவர்கள் பதுக்கி வைத்துள்ளதாகவும், பல நாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளதாகவும் முன்பு செய்திகள் வந்தன. இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் இவர்கள் ஆட்சியின்போது இராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு பல கோடி ரூபாயை இரகசிய நன்கொடை என்கிற பெயரில் தொடர்ச்சியாக வழங்கியதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி 2004 முதல் 2014 வரை வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி), ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (எஸ்.ஐ.எல்), கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (கெயில்) மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடைகளை சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு (ஆர்ஜிஎஃப்) வழங்கியது இப்போது தெரிய வந்துள்ளது.

அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சோனியா காந்தி தலைமையிலான ராஜீவ் அறக்கட்டளைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் நன்கொடைகளை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 1991 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது மத்திய பட்ஜெட்டில் ரூ .100 கோடி ஒதுக்கீடு செய்து ராஜீவ் அறக்கட்டளைக்கு நிதியளித்தது தொடர்பாக புகாரில் மன்மோகன் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சிக்கும் நிலையில் ராஜீவ் அறக்கட்டளைக்கு பொதுத்துறை நிறுவனங்களால் நிதியளிப்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.

2005-06 ஆம் ஆண்டின் ராஜிவ்காந்தி அறக்கட்டளை அறிக்கையின்படி, பொதுத்துறை நிறுவனங்களான கெயில், ஆயில் இந்தியா, ஓஎன்ஜிசி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், எஸ்பிஐ மற்றும் எஸ்ஐஎல் ஆகியவை முறைகேடான வகையில் தொடர்ச்சியாக நிதியளித்தது என்பது தெரிய வந்துள்ளது.

2006-07 ஆம் ஆண்டில், பொதுத்துறை நிறுவன நன்கொடையாளர்கள் கெயில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் (ஹட்கோ), தொழில்துறை மேம்பாட்டு வங்கி லிமிடெட் (ஐடிபிஐ), ஆயில் இந்தியா, ஓஎன்ஜிசி, சாய்ல், எஸ்பிஐ மற்றும் தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் நிதி அளித்ததாகவும் 2007-2008 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா வங்கி, கெயில் மற்றும் ஓ.என்.ஜி.சி என அறக்கட்டளை பட்டியலிடுகிறது.

2008-09 ஆம் ஆண்டில், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, கெயில், ஓஎன்ஜிசி, கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் லிமிடெட், எஸ்பிஐ மற்றும் எஸ்ஐஎல். ஆகிய நிறுவனங்கள் நிதி அளித்த விவரங்கள் உள்ளன.

2009-2010 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா வங்கி, ஓ.என்.ஜி.சி மற்றும் எஸ்.ஐ.எல்., 2010-2011 ஆம் ஆண்டில் கெயில், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ மற்றும் எஸ்ஐஎல். 2011-12 ஆம் ஆண்டில் கெயில், ஹட்கோ, நேஷனல் பில்டிங்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் லிமிடெட், ஓ.என்.ஜி.சி, எஸ்.பி.ஐ, சாய்ல் மற்றும் யூகோ வங்கி என ராஜிவ்காந்தி அறக்கட்டளை பட்டியலிடுகிறது.

2012-13ஆம் ஆண்டில் ஓ.என்.ஜி.சி, எஸ்பிஐ, கெயில், சாய்ல் மற்றும் யூகோ வங்கி ஆகியோர் நன்கொடை அளித்ததாக பட்டியலிடப்பட்டுள்ளது.

2013-15 ஆம் ஆண்டில் இரண்டு ஆண்டு காலத்துக்கும் சேர்த்து பொதுத்துறை நிறுவனங்களான கெயில், ஓ.என்.ஜி.சி, எஸ்.பி.ஐ மற்றும் எஸ்.ஐ.எல்.ஆகியவை மேற்படி அறக்கட்டளைக்கு நன்கொடைகளை அளித்ததாகவும், அதன் பிறகு பாஜக தலைமையிலான என்டிஏ அரசு பதவி ஏற்றதிலிருந்து நன்கொடைகள் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.

warajyamag.com/news-brief/psus-made-regular-donations-to-sonia-gandhi-headed-rajiv-gandhi-foundation-during-congress-rule-report

Next Story