Kathir News
Begin typing your search above and press return to search.

தெரிந்துகொள்வோம் - இந்தியாவின் மகத்துவமான சிந்தனையாளர் ரபிந்த்ரநாத் தாகூர்.!

தெரிந்துகொள்வோம் - இந்தியாவின் மகத்துவமான சிந்தனையாளர் ரபிந்த்ரநாத் தாகூர்.!

தெரிந்துகொள்வோம் - இந்தியாவின் மகத்துவமான சிந்தனையாளர் ரபிந்த்ரநாத் தாகூர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 2:16 AM GMT

பெங்காலில் பிறந்த பெரும் மேதை. ரபிந்த்ரநாத் தாகூர் என்ற பெயர் இன்றைய இந்திய கலைத்துறையில் ஒரு முக்கிய அடையாளம். மற்றவர்கள் வாழ்வதற்காக போராடிக்கொண்டிருக்க இவர் தன் வாழ்வை தன் போக்கில் வாழ்ந்தார். இவருடைய சகோதர்களும் இவரை போலவே கலைத்துறையில் ஆர்வமிக்கவர்களாய் இருந்தனர். மிக இளம் வயதிலேயே கலைத்துறையில் கால்பதித்தவர் தாகூர்

அவருடைய படைப்புகள் இன்றும் அவர் புகழை பறை சாற்றுவதாக அமைந்துள்ளன. 1913 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற, ஐரோப்பியர் அல்லாத முதல் நபர் இவரே. இவர் உலகிலுள்ள எழுத்தாளர்களை அனைவரையும் தன் தனித்துவம் மிக்க எழுத்தால் தாக்கமுற செய்தார். எழுத்துலகில் ஒரு புதிய பரிமாணத்தை படைத்தளித்தார். பெங்கால் காலையிலிருந்தே கடினமான காலை கட்டமைப்புகளை உதறியெறிந்த புரட்சி மிகு படைப்பு இவருடையது. இறுக்கமான இலக்கிய படைப்புகளை எளிமைப்படுத்தியவர்.

இவருடைய நாவல்கள், கட்டுரைகள் கதைகள், பாடல்கள், நடன நாடகங்கள், அரசியல் மற்றும் தனிப்பட்ட பேச்சுகள் கீதாஞ்சலி, கோரா போன்றவை உலக புகழ் பெற்ற படைப்புகளாக இன்றும் திகழ்கின்றன. இயல்பான நடையும், இயற்கையான வசீகரமும் இவர் எழுத்தின் தனித்துவங்கள் . இவருடைய படைப்புகளில் இரண்டு இரு தேசத்தின் தேசிய கீதமாக இருப்பது தனிச்சிறப்பு.

இந்தியாவின் ஜன கன மன மற்றும் பங்களாதேஷின் அமர் சோனார் பங்லா மற்றும் இலங்கையின் தேசியிற் கீதம் இவருடைய படைப்பின் ஈர்ப்பால் உருவானது.

இன்றும் மனித குலத்தின் மகத்துவமான எழுத்தாளராக, மனிதராக இவர் போற்றப்படுகிறார். இவருடைய படைப்பு இந்திய கலைகளுக்கான பொன் மகுடம் என்றால் அது மிகையில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News