Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரி : காரைக்கால் வந்தடைந்த காவிரி நீர் - மலர் மற்றும் நெல் தூவி வரவேற்ற அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 6:23 AM GMT

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் விவாசாயத்தை நம்பி உள்ளனர்.

கடைமடை பகுதியான காரைக்கால் மாவட்டத்தில், காவிரி நீரை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது.

உரிய நேரத்தில் காவிரி நீர் வராததால், சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் காத்து இருந்தனர்.தற்போது, பாசனத்திற்காக மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையை வந்தடைந்த மேட்டூர் நீர், இன்று காரைக்காலுக்கு வந்து சேர்ந்தது.

காரைக்கால் எல்லையில் உள்ள அம்பகரத்துார் நூலாற்றில் காவிரி நீரை அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் நூலாற்றில் உள்ள தடுப்பணை மதகுகளை திறந்து பூஜை செய்து காவிரி நீரை மலர் மற்றும் நெல் தூவி வரவேற்றனர்.

காவிரி நீர் வந்துள்ளதை தொடர்ந்து, விவசாயிகள் சாகுபடி பணியை துவக்கி உள்ளனர் . இதன் மூலம் அம்பகரத்தூர், சேத்தூர், கருக்கங்குடி, சுரக்குடி, திருநள்ளாறு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 9 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News