Kathir News
Begin typing your search above and press return to search.

அன்பழகன் மரணத்தில் துக்கம் விசாரிக்காத கனிமொழி சாத்தான்குளம் போய் அரசியல் செய்யலாமா? - தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கேள்வி.!

அன்பழகன் மரணத்தில் துக்கம் விசாரிக்காத கனிமொழி சாத்தான்குளம் போய் அரசியல் செய்யலாமா? - தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கேள்வி.!

அன்பழகன் மரணத்தில் துக்கம் விசாரிக்காத கனிமொழி சாத்தான்குளம் போய் அரசியல் செய்யலாமா? - தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் கேள்வி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 12:32 PM GMT

கோவை கணபதியில் செய்தியாளர்களிடம் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில் முதலில் ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவுக்கு தனது அஞ்சலியை தெரிவித்துக் கொண்டார். மத்திய அரசின் ஒர் ஆண்டு சாதனைகளை எடுத்துச்செல்லும் அதே சமயத்தில் சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து வீடு வீடாகச் சென்று எடுத்துச் செல்லி வருகிறோம் என்றார்.

பா.ஜ.க ஆட்சியில் பல ஆண்டுகளாக இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளது. அதில் சொல்லும் விதமாக ராமர் கோவில் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டு ராமர் கோவில் கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அதே போல் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால் பழங்குடி மக்களுக்கு ஏற்பட்ட பலன்கள், முத்தலாக், சி ஏ ஏ உள்ளிட்ட சட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டுள்ள தேசப் பொருளாதரத்தை சரி செய்யவும், நிவாரணங்களை அளிக்கவும் மத்திய அரசால் அமல் படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களை விவரித்தார்.

சாத்தான்குளம் சம்பவத்தை பொறுத்தவரையில் அது கண்டிக்கத்தக்கது. சிலர் அரசியல் ஆக்க முயற்சி செய்கின்றனர். வழக்கு சி.பி.ஐ வசம் அளிக்கப்பட்டுள்ளது. சில காவல்துறையினர் செய்த தவறு காரணமாக ஒட்டுமொத்த காவல்துறையினரையும் பேசுவது சரியல்ல. சி.பி.ஐக்கு மாற்றப்பட்டதை வரவேற்கிறோம்.

தங்கள் கட்சியின் சொந்த எம்.எல்.ஏ அன்பழகன் மரணத்திற்கு அவரது வீட்டிற்கு கூட செல்லாத திமுக எம்.பி கனிமொழி சாத்தான்குளத்திற்கு போய் அரசியல் செய்து வருகின்றார்.

கொரோனா பொறுத்தவரையில் எல்லாரும் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்த காரணத்தினால் தான் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தப்ளிக் மாநாடு மூலம் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முழு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது. மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு முருகன் கூறினார்.

இதில் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பொருளாளர் எஸ்.ஆர் சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார், செய்திதொடர்பாளர் சபரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News