Kathir News
Begin typing your search above and press return to search.

திருநங்கையருக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வேலை வாய்ப்பு - உத்தர பிரதேச முதல்வர் யோகி அதிரடி!

திருநங்கையருக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வேலை வாய்ப்பு - உத்தர பிரதேச முதல்வர் யோகி அதிரடி!

திருநங்கையருக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வேலை வாய்ப்பு -  உத்தர பிரதேச முதல்வர் யோகி அதிரடி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 3:21 PM GMT

யோகி ஆதித்யநாத்தின் அரசு மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கையர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பு அளிக்க தீர்மானித்துள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெறும் உத்திர பிரதேச அரசு நொய்டா பிரிவு 50 மெட்ரோ ரயில் நிலையத்தில் திருநங்கையர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

நொய்டா ஆணையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கூறுகையில், திருநங்கையர் இந்த சமூகத்தின் முக்கிய பிரிவின் ஒரு பகுதியாக மாற இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

இந்த முயற்சியின் மூலம், டிக்கெட் வழங்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் போன்ற செயல்பாடுகளால் திருநங்கையர் சமூகத்திற்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சமூக நலனுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல முன்வந்துள்ளனர்.

பொது இடங்களை திருநங்கையர் சமூகத்திற்கு தோழமையாக மாற்ற பிரத்யேக கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நொய்டா ரயில் கார்ப்பரேஷன் திருநங்கையரை உள்ளடக்கியதால் ஷீ-மேன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் குஷிநகர் மாவட்டத்தில் நாட்டில் முதல்முறையாக திருநங்கை சமுதாயத்திற்காக முதல் பல்கலைக்கழகம் துவங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இங்கு, இந்த சமூகத்தின் உறுப்பினர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை தங்கள் கல்வியைத் தொடரலாம். ஆராய்ச்சி படிப்பு தொடரலாம் மற்றும் பிஹெச்டி பெறலாம். இந்தப் பல்கலைக்கழகம் குஷிநகர் மாவட்டத்தில் ஃபசில்நகர் பகுதியில் கட்டப்படும். இது அகில பாரதிய கின்னர் சிக்ஷா சேவா ட்ரஸ்டால்(அகில இந்திய திருநங்கையர் கல்விசேவை அறக்கட்டளை) கட்டப்படுகிறது.

இதற்கு முன், நொய்டா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் பிரிவு 76 மற்றும் அக்வா லைனில் உள்ள பாரிசவுக் என்னும் இரண்டு நிலையங்களை 'பிங்க் ஸ்டேஷன்ஸ்' என்று அறிவித்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை, டயாபர் மாற்றும் வசதி மற்றும் உடை மாற்றும் அறை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story