Kathir News
Begin typing your search above and press return to search.

எங்கள் நிறுவன வரலாற்றில் ஒரு சின்னஞ்சிறிய கருவியைக் கூட சீனாவில் இருந்து வாங்கியதில்லை - முகேஷ் அம்பானி பெருமிதம்.!

எங்கள் நிறுவன வரலாற்றில் ஒரு சின்னஞ்சிறிய கருவியைக் கூட சீனாவில் இருந்து வாங்கியதில்லை - முகேஷ் அம்பானி பெருமிதம்.!

எங்கள் நிறுவன வரலாற்றில் ஒரு சின்னஞ்சிறிய கருவியைக் கூட சீனாவில் இருந்து வாங்கியதில்லை -  முகேஷ் அம்பானி பெருமிதம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 2:19 AM GMT

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஜியோ டெலிகாம் நிறுவனம் தனது சிறந்த கட்டமைப்பு, தரமான சேவை மூலம் இந்தியாவின் நாற்பது சதவீத வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக உள்ளது. உலக அளவிலும் பல நாடுகளின் நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக உள்ள ஜியோ டெலிகாம் இப்போது சீனாவின் ஹவாய் டெலிகாம் சேவைக்கு பதிலாக அமெரிக்காவில் கால் பதிக்க உள்ளது என்கிற இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ கூறுகையில் " இப்போது அமெரிக்கா சீனாவின் ஹவாய் சேவையிலிருந்து விலகி உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களான ஜியோ, டெலிஃபோனிகா, ஆரஞ்சு, டெல்ஸ்ட்ரா போன்ற தரமான நிறுவனங்களின் சேவையை பெறவுள்ளது,

ஏனெனில் சீனாவின் ஹவாய் நிறுவனம் போல ஒரு நாட்டை உளவு பார்க்கும் தொழில் நுட்பங்களுடன், ஜியோ போன்ற நிறுவனங்கள் சேவை செய்வதில்லை" என்று கூறியுள்ளார்.

இந்திய நிறுவனமான ஜியோ வை அமெரிக்கா இவ்வாறு சிறந்த தரமான நிறுவனம் என்று வானளாவ புகழ காரணம் என்னவாக இருக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்தால்.. ரிலையன்ஸ் நிறுவனம் முதன் முதலாக சீன தயாரிப்புகளை நிராகரித்த முதல் முன்னணி நிறுவனம் ஆகும்.

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில் " எங்கள் நிறுவனங்களில் எப்போதும் நாங்கள் பயன்படுத்தும் ஒரு சின்னஞ்சிறிய கருவியைக் கூடசீனாவிடமிருந்து வாங்கியதில்லை" என்று பெருமையுடன், வெளிப்படையாக அறிவித்தார்.

மலிவாகவும் இருக்க வேண்டும், அதிக நுகர்வோரை சென்றடைய வேண்டும், அந்த பொருள் சிறந்த பாதுகாப்பை அதை வாங்கும் நுகர்வோருக்கு தரவேண்டும் என்றார்.

ஒரு முக்கியமான கருவியை சீனா மிக மலிவான விலையில் தருகிறேன் என்றது, ஆனால் விலை சற்று அதிகமாக இருந்தாலும் ரிலையன்ஸ் நிறுவனம் அந்த கருவிகளை சாம்சங் நிருவனமிடமிருந்தே பெற்றது.

இதற்கு காரணம் தங்கள் நிறுவன தொழில் நுட்ப ரகசியங்களை சீனா எங்கே நமக்கு தெரியாமல் காப்பி அடித்து விடுமோ என முன்னெச்சரிக்கையுடன் சிந்தித்து, ஒரு துல்லிய தொலைநுட்ப பார்வையுடன் தென் கொரிய நிறுவனமான சாம்சங்கிடமிருந்து சில கருவிகளைப் பெற்றார் முகேஷ் அம்பானி என்று கூறப்படுகிறது.

அமெரிக்கப் பங்குச் சந்தையில் சீனாவின் மிகப்பெரிய முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களைப் போல மற்ற புதிய நிறுவனங்களின் பட்டியலும் மதிப்பீட்டிற்காக இந்த ஆண்டு வைக்கப்படும் நிலையில், ஜியோ பற்றி அமெரிக்க செயலாளர் பாம்பியோவின் அறிக்கை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அமெரிக்கா ஏற்கனவே ஜியோ நிறுவனத்தை "சுத்தமான நிறுவனம் " என அறிவித்துள்ளது, இது அமெரிக்க நாட்டு சந்தைகள் மட்டுமன்றி, பிற நாட்டு சந்தைகளிலும் சேவையை விரிவாக்க ஜியோவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது என கூறலாம்.

https://tfipost.com/2020/06/not-a-single-chinese-component-mukesh-ambanis-genius-paves-jios-way-to-the-us-market/

Next Story