Kathir News
Begin typing your search above and press return to search.

சீன ராணுவ அதிகாரிகள், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை இரகசியமாக சந்தித்த மர்மம் என்ன ?

சீன ராணுவ அதிகாரிகள், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை இரகசியமாக சந்தித்த மர்மம் என்ன ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 July 2020 10:07 AM GMT

உலகம் இன்றுள்ள சூழ்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக முன்வரும் இந்நேரத்தில், இந்தியாவுக்கு எதிராக நேரடியாக யுத்தம் நடத்தினால் நிச்சயம் தனக்கு பல விதங்களில் அழிவு உண்டாகும் என சீனா நினைப்பதாகவும், இப்போதே கிட்டத்தட்ட தனக்கு தோல்வி கிடைத்து விட்டதாக சீனா ஒப்புக் கொண்டுள்ளது, அதன் நடவடிக்கைகள் மூலம் தெரிவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதனால்தான் பாகிஸ்தான் பாணியில் பயங்கரவாதத்தை தூண்டும் முடிவுக்கு சீனா வந்துள்ளது என்றும், அது தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதற்காக பலவீனமான நாடுகளின் தோளின் மீது துப்பாக்கியை வைத்து இந்தியாவை குறி வைக்க முயல்வது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலையில் சீனாவின் ஒரு சதித்திட்டம் இப்போது அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் வந்த தகவல்களின் படி, சீனாவின் சில ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பான அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை சந்தித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்து, இந்த அமைப்பை வலுப்படுத்தி இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த சீனா முயல்வது தெரிந்துள்ளது.

அல்-பத்ர் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இது ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த அமைப்பு கார்கில் போரின் போதும், பாகிஸ்தான் ராணுவத்திற்கு நேரடியாக உதவியது.

சீனா இப்போது தனது நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானைப் போல பயங்கரவாதத்தை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் அதனால்தான் பாகிஸ்தான் ஒத்துழைப்புடன் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா டுடே பத்திரிக்கை கூறுகையில் " ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பயங்கரவாதத்தைத் தூண்ட சீனா அல்-பத்ர் என்ற பயங்கரவாதக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக சியாச்சிம் உள்ளிட்ட லடாக் பகுதிகளில் அதிக அனுபவமும், பயிற்சியும் பெற்ற இயக்கம் அல்-பத்ர். பாக்கிஸ்தானின் இரகசிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மூலம் இந்த பயங்கரவாதிகளை அனுப்ப சீனா வலியுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

"அல்-பத்ர் அமைப்பை புதுப்பிக்க சீனா ஆதரவு வழங்கக்கூடும் என்றும் பாகிஸ்தானும் சீனாவும் இதற்கான பின்னணியை அமைத்து தருகின்றன என்பதைக் குறிக்கும் அறிகுறிகளில் இந்த சந்திப்பும் ஒன்று" என்று ஒரு அதிகாரி மேற்கோளிட்டு கூறியுள்ளார்.


https://swarajyamag.com/insta/china-turns-to-terrorism-holds-talks-with-al-badr-isi-to-incite-terror-activities-in-jk-report

Next Story
கதிர் தொகுப்பு
Trending News