Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சை அதிகரிக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.!

கொரோனா தொற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சை அதிகரிக்கப்படும் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.!

கொரோனா தொற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சை அதிகரிக்கப்படும் -  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 7:28 AM GMT

சென்னை மாவட்டத்தில் கொரோனாக்காக சிகிச்சை அளிக்கும் பிற மையங்களிலும் சித்த மருத்துவம் அதிகரிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் இருக்கும் சாலிகிராமத்தில் உள்ள ஜவஹா் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை கொடுக்க பட்டு 30 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனைப்பற்றி சென்னை ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சியில் 12,000 பணியாளர்கள் கொண்டு 15 மண்டலங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை அந்தந்தப் பகுதியில் இருக்கும் முகாமுக்கு சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. ஆய்வுக்காக வரும் களப் பணியாளர்களுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை தரவேண்டும். சென்னையில் படுக்கை வசதிகள் அதிகரிக்க சுகாதாரத் துறையுடன் இணைந்து திட்டமிட்டு உள்ளது.

தற்போது அலோபதி மருத்துவர்கள் உடன் சேர்ந்து சித்த மருத்துவத்திலும் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் நல்ல பலன் கொடுப்பதால் இதன் மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் ஜவஹா் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ மையத்தில் இதுவரை 744 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதில் 569 பேர் குணமடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசியுள்ளார்.

Next Story