Kathir News
Begin typing your search above and press return to search.

தேசிய அளவில் ஒலிக்கும் #வெற்றிவேல்_வீரவேல் முழக்கம்.! 1,60,000 ட்வீட்டுகளுடன் களைகட்டியது!

தேசிய அளவில் ஒலிக்கும் #வெற்றிவேல்_வீரவேல் முழக்கம்.! 1,60,000 ட்வீட்டுகளுடன் களைகட்டியது!

தேசிய அளவில் ஒலிக்கும் #வெற்றிவேல்_வீரவேல் முழக்கம்.! 1,60,000 ட்வீட்டுகளுடன் களைகட்டியது!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 July 2020 3:09 PM GMT

இந்து மத நம்பிக்கைகைகளை கொச்சைப்படுத்துவதையே 'பகுத்தறிவு' என நம்பிக் கொண்டும், தமிழகத்தை 'பெரியார் மண்' என படம் காட்டிக் கொண்டும் இருந்த ஆசாமிகளுக்கு இடியாய் வந்திறங்கியது வெற்றிவேல் வீர வேல் எனும் முழக்கம். 60 வருடங்களுக்கும் மேலாக கேட்பார் இல்லையென நினைத்து மானாவாரியாக நம் கடவுள்களை அவதூறு செய்தவர்கள் கடைசியில் தமிழ்க் கடவுளாம் முருகனையே பழித்துப் பேசினர்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என இதுகாலம் வரைப் பொறுத்துக் கொண்டிருந்த தமிழகம் வெகுண்டெழுந்தது.

சமூக ஊடகங்களில் மக்களிடம் எழுந்த கடுங்கோபத்தைக் கண்டு, தினம் ஒரு அரசியல் தலைவரும், திரையுலக நட்சத்திரங்களும் 'கறுப்பர் கூட்டத்திற்கு' எதிராகக் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர். இவர்களை அம்பாகக் கொண்டு வில்லாக செயல்பட்டதாகக் கூறப்படும் திராவிடத் தலைவர்களும் கூட தங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என விளக்கம் கொடுக்கும் அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரானாத் தொற்று நோய்ப் பரவலால் வீதியில் இறங்கிப் போராட முடியாத நிலையில் மக்கள் இருந்தாலும், வேறு என்னென்ன வழிகளில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியுமோ அந்த ரீதியில் பதிவு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக #வெற்றிவேல்_வீரவேல் எனும் ஹாஷ்டாக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. தற்போது வரை 160k டீவீட்டுகளுடன் #வெற்றிவேல்_வீரவேல் முழக்கம் ஓங்கி ஒலித்துக் கொண்டுள்ளது.

தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முருக பக்தர்களுடன், பிற நாட்டு இந்துக்களும் சேர்ந்து கொண்டு #வெற்றிவேல்_வீரவேல் எனும் முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.

வடக்கு,கிழக்கு,மேற்கு,தெற்கு என எப்பகுதியை சேர்ந்தாலும் இந்துக்களாக ஒன்றுபட்டு நிற்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

#வெற்றிவேல்_வீரவேல்

Next Story