16 வயதில் அதிரடி பேட்டிங் செய்யும் இந்தியா வீராங்கனை - ஷஃபாலி வர்மா!
16 வயதில் அதிரடி பேட்டிங் செய்யும் இந்தியா வீராங்கனை - ஷஃபாலி வர்மா!

9 வயது இருக்கும் போது சச்சின் இவருடைய கடைசி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுவதை ஹரியானாவில் நேரில் பார்த்தார். தற்போது இவர் 15 வயதில் இந்தியா பெண்கள் அணியில் இடம் பெற்றார்.
ஆனால் சச்சின் 16வயதில் தன இந்தியா அணியில் இடம் பெற்றார்.
ஹரியானாவை சேர்ந்த ஷஃபாலி வர்மா , சிறு வயதில் அவருடைய சகோதரன் போல் தலைமுடியை வெட்டி, கொண்டு சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தவர் . அவருடைய 9 வயதில், 19 வயது உட்பட்டவர்களுக்கான வீராங்கனைகளுடன் சேர்ந்து பயிற்சியை ஆரம்பித்தார்.
அவருடைய கடின உழைப்பால் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா சீனியர் பெணிகள் அணியில் இடம் பெற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமாகி விளையாடினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அரை சதம் அடித்து, சச்சினுடைய 30 வருட சாதனையை முறியடித்தார். அதுமட்டுமில்லமல் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதால் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கின் பாராட்டை பெற்றார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டிலும் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார். இந்தியா அணி அரை இறுதி போட்டிற்கு முன்னேறியது.