Kathir News
Begin typing your search above and press return to search.

கத்தோலிக்க ஆலயத்தில் பலமுறை பலாத்காரம் - ஆண் குழந்தைக்கு பாதர் ஆன சர்ச் பாதர் : 17 வயது மைனர் பெண்ணை கற்பழித்துவிட்டு, கல்யாணம் செய்கிறேன் என்று பிடிவாதம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 July 2020 7:50 AM GMT

கேரளாவில், இளம்பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிவிட்டு, இப்போது சிறை தண்டனைக்கு பயந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று பாதிரியார் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்திவருகிறது.

கேரளாவில் கண்ணூர் மாவட்டம் குட்டியூரில் புனித. செபஸ்தியார் கத்தோலிக்க ஆலயம் அமைத்துள்ளது. இந்த ஆலயத்தில் பாதிரியாராக இருந்த ராபின் மாத்யூ, கடந்த 2016 ஆம் ஆண்டு தேவாலயத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் பள்ளியில் படித்து வந்த மைனர் பெண்ணை தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிரியரால் கர்ப்பமடைந்த இளம் பெண் தன் 17 வயதில் 2017 ஆம் அண்டு பிப்ரவரி 17- ந் தேதி ஆண் குழந்தைக்கு தயானார். இளம் பெண்ணுக்கு குழந்தை பிறந்ததால், விஷயம் வெளியே தெரிந்து அக்கம் பக்கத்தினர் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து பாதிரியார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அவர் மேல் குற்றம் உறுதி செய்யப்பட்டு, கிடைத்த சாட்சிகளின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

டி.என்.ஏ பரிசோதனையிலும் இளம் பெண்ணின் குழந்தைக்கு பாதிரியார்தான் தந்தை என்பது உறுதியானது. இந்த நிலையில் சிறையில் அடைப்ட்டு ராபின் மாத்யூ கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், ''பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறேன். குடும்பத் தலைவனாக இருக்கவும் ஆசைப்படுகிறேன். இதற்காக 2 மாதங்கள் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். '' என்று தெரிவித்துள்ளார்.

Next Story