Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் - 42 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு ரூ 65,454 கோடி நிதி உதவி!

பிரதமரின் ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் - 42 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு ரூ 65,454 கோடி நிதி உதவி!

பிரதமரின் ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான ஏழைகள் மறுவாழ்வுத் திட்டம் - 42 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு ரூ 65,454 கோடி நிதி உதவி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Jun 2020 1:17 PM GMT

ரூ 1.70 லட்சம் கோடி மதிப்பிலான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்கள், ஏழை முதியோர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இலவச உணவு தானியங்களையும், பணப் பட்டுப்பாடாவையும் அரசு அறிவித்தது. இந்தத் தொகுப்பு சிறப்பாக செயல்படுத்தப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. 42 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு ரூ 65,454 கோடி நிதி உதவி பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கிடைத்தது.

பிரதமரின் விவசாயிகள் திட்டத்தின் முதல் தவணையாக 8.94 கோடி பயனாளிகளுக்கு ரூ 17,891 கோடி முன்கூட்டியே தரப்பட்டது. 20.65 கோடி மகளிர் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதல் தவணையாக ரூ 10,325 கோடி வரவு வைக்கப்பட்டது. 20.62 கோடி மகளிர் ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ 10,315 கோடி வரவு வைக்கப்பட்டது. 20.62 கோடி மகளிர் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மூன்றாவது தவணையாக ரூ 10,312 கோடி வரவு வைக்கப்பட்டது.

சுமார் 2.81 கோடி முதியவர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ 2814.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து 2.81 கோடி பயனாளிகளுக்கும் பலன்கள் இரண்டு தவணைகளில் வழங்கப்பட்டன. ரூ 4312.82 கோடி மதிப்பிலான நிதி உதவி 2.3 கோடி கட்டிட, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

சுய-சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இடம் பெயர்ந்தோருக்கு இலவச உணவு தானியம் மற்றும் கொண்டைக்கடலை இரண்டு மாதங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. 19 ஜூன், 2020 வரை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 6.3 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளன. 34,074 மெட்ரிக் டன் சென்னாவும் இந்தத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன.

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மொத்தம் 8.52 கோடி சமையல் எரிவாயு உருளைகள் பதிவு செய்யப்பட்டு, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. ஜுன் 2020-இல் 2.1 கோடி பிரதமரின் உஜ்வாலா திட்ட உருளைகள் பதிவு செய்யப்பட்டு, 1.87 கோடி உருளைகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன. பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத முன்பணமாக ரூ 5767 கோடியை 20.22 லட்சம் உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் எடுத்துப் பயனடைந்துள்ளனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கூலிகள் 01.04.2020 முதல் உயர்த்தப்பட்டுள்ளன. 88.73 கோடி மனித உழைப்பு தினங்களுக்கான வேலை நடப்பு நிதி ஆண்டில் செய்யப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள கூலி மற்றும் பொருள்களுக்கான பணத்தைக் கொடுக்க மாநிலங்களுக்கு ரூ 36,379 கோடி வழங்கப்பட்டுள்ளது. 65.74 லட்சம் பணியாளர்களின் கணக்குகளுக்கு 24 சதவீத தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பாக ரூ 996.46 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட கனிம நிதியின் கீழ், 30 சதவீதத் தொகையான ரூ 3,787 கோடியை செலவு செய்யுமாறு மாவட்டங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு, ரூ 183.65 கோடி இது வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார சேவை மையங்களில் பணிபுரிவோருக்கான சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் 30 மார்ச், 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது. நியூ இந்தியா அஷூரன்ஸ் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. செப்டம்பர் வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News