Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா சிறப்பு கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ் ₹17,705 கோடி கடனுதவி - தமிழகம்‌ டாப்!

கொரோனா சிறப்பு கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ் ₹17,705 கோடி கடனுதவி - தமிழகம்‌ டாப்!

கொரோனா சிறப்பு கடன் உத்திரவாதத் திட்டத்தின் கீழ் ₹17,705 கோடி கடனுதவி - தமிழகம்‌ டாப்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2020 7:14 AM GMT

ஜுன் 5-ஆம் ‌தேதி வரை பொதுத்துறை வங்கிகள் ₹17,705.64 கோடி மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் அளித்ததுடன் ₹8,320.24 கோடி மதிப்பிலான நிதியை விநியோகம் செய்திருக்கும் நிலையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறு‌குறு தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும்‌ வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட அவசரகால 100 சதவீத கடன் உத்திரவாதத் திட்டம்‌ அதிவேகமாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இந்த திட்டத்தின் வாயிலாக அதிக நிதி ஒதுக்கப்பட்டு மற்றும் விநியோகிக்கப்பட்டு பயனடைந்த சிறு குறு நிறுவனங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது நிதி அமைச்சகம் பதிவிட்ட ட்வீட்டிலிருந்து தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 33,725 வங்கிக் கணக்குகளுக்கு ₹2,018.89 கோடி அளவிலான நிதி அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சக தரவுகளின் படி தெரிய வருகிறது. இதில் ₹1325.04 கோடி நிதி, 18,867 கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

அவசரகால கடன் உத்திரவாத திட்டம் குறிப்பாக கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையை சமாளிக்க சிறப்புத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு வங்கிகளுக்கு உதவித்தொகை வழங்கி அதன் மூலம் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி செய்து நிறுவனங்கள் இயங்கத் தேவையான கையிருப்பு நிதியை வழங்குகிறது. இத்திட்டத்திற்காக மேலும் ₹3 லட்சம் கோடி வரை நிதி ஒதுக்கப்பட‌ உள்ளது.

Next Story