Kathir News
Begin typing your search above and press return to search.

சுயசார்பு பாரதம் : இந்திய செஞ்சிலுவை சங்கம் 1.80 லட்சம் காதி முகக்கவசங்கள் கொள்முதல்.!

சுயசார்பு பாரதம் : இந்திய செஞ்சிலுவை சங்கம் 1.80 லட்சம் காதி முகக்கவசங்கள் கொள்முதல்.!

சுயசார்பு பாரதம் : இந்திய செஞ்சிலுவை சங்கம் 1.80 லட்சம் காதி முகக்கவசங்கள் கொள்முதல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2020 2:56 PM GMT

காதி முகக்கவசங்களின் புகழ் தனது சிறந்த தரத்தினாலும், குறைந்த விலையாலும் உலகம் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் (IRCS) காதி மற்றும் கிராம தொழில் துறை (KVIC) ஆணையத்திடம் இருந்து 1.80 லட்சம் முகக்கவசங்களைக் கொள்முதல் பெற ஆணை பிறப்பித்துள்ளது. இதை சிறு குறு தொழிற் நிறுவன அமைச்சகம் இன்று (ஜூலை 30) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் IRCS வழங்கவிருக்கும் முகக்கவசங்களில் 100 சதவீதம் இரண்டு அடுக்குகள் பருத்தியால் செய்யப்பட்டும் பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் பைப்பிங் செய்யப்பட்டு இருக்கும் என்று KVIC அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த இரண்டு அடுக்குகள் பருத்தியால் ஆன முகக்கவசங்கள் IRCS வழங்கிய வழிமுறைகளின் படி KVIC தயாரிக்கின்றது. முகக்கவசங்களின் வலதுபுறத்தில் IRCS சின்னமும் இடதுபுறத்தில் KVIC குறியும் அச்சிடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த முகக்கவசங்களை உருவாக்க 20,000 மீட்டர் துணி தேவைப்படும் அதனை உருவாக்குபவர்களுக்கு குறைந்தது 9000 வேலை நாட்கள் கொடுக்கும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

IRCS -இன் பெரும் அளவிலான முகக்கவச ஆடர்களை வரவேற்பதாகவும் மேலும் அது "சுயசார்பு பாரத் " செல்வதற்கான ஒரு முக்கிய படியாக அமையும் என்று KVIC நிறுவனர் வினய் சக்சேனா தெரிவித்துள்ளார்.

"இந்த கொள்முதல்கள் காதி தொழிலாளர்களுக்குப் பெருமளவில் துணியை உற்பத்தி செய்யவும் வருமானத்தை ஈட்டவும் உதவும்" என்று சக்சேனா கூறியுள்ளார்.

இதுவரை KVIC 10 லட்சம் முகக்கவசங்களை விற்றுள்ளதாகவும் அதில் இரண்டடுக்குக்கள் மற்றும் மூன்றடுக்குக்கள் கொண்ட பட்டு முகமூடியும் அடங்கும் என்கின்றனர். KVIC -இன் வாடிக்கையாளர்களில் ஜம்மு &காஷ்மீர் அரசாங்கம், ராஷ்ட்ரபதி பவன், பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய அமைச்சகம் ஆகியோரும் உள்ளடங்குவர். மேலும் காதி முகக்கவசங்களை ஆன்லைன் மூலமும் பொதுமக்கள் பெறுகின்றனர்.

Source:https://swarajyamag.com/insta/big-boost-to-swadeshi-industry-indian-red-cross-society-to-buy-180-lakh-khadi-face-masks-from-kvic

Next Story
கதிர் தொகுப்பு
Trending News