ரூ.500 க்கு தமிழகத்தில் 19 வகை மளிகை பொருட்கள் நியாய விலை கடைகளில் விற்க முடிவு, மகிழ்ச்சியில் மக்கள்.!
ரூ.500 க்கு தமிழகத்தில் 19 வகை மளிகை பொருட்கள் நியாய விலை கடைகளில் விற்க முடிவு, மகிழ்ச்சியில் மக்கள்.!

உலக அளவில் கோவிட்-19 ஏராளமான உயிர்களைப் பலி வாங்கியதுடன், பாதிக்கும் பகுதிகளை அதிகரித்துக் கொண்டே போகிறது. கோவிட் - 19 பரவுதலைத் தடுக்க, முடக்கநிலை அமல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நோய் பரவக் கூடிய சங்கிலித் தொடரில் பிணைப்புகளை உடைப்பதற்காக, அரசு வழங்கியுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியமான செயல்பாடாக உள்ளது.
நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளி காக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்னதான் மக்களை வெளியே வராமல் இருக்க சொன்னாலும் அன்றாட காய்கறி மற்றும் மளிகை சாதனங்களை வாங்க மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் மளிகைக்கடை கூட்ட நெரிசலை குறைக்கவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் நியாய விலை கடைகளில் மளிகை பொருட்களை விற்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் உளுந்து, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் உள்ளிட்ட 19பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரூ.500க்கு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது..